செய்திகள்

ஐபிஎல் முதல் போட்டிக்கான ஆன் லைன் டிக்கெட் விற்பனை: சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன

சென்னை, மார்ச் 18–

சென்னை சூப்பர் கிங்ஸ் – ஆர்.சி.பி. இடையே முதலாவது ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முறை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை 2 கட்டங்களாக நடத்துவதற்கு நிர்வாக குழுவினர் முடிவு செய்துள்ளனர்.அதன் அடிப்படையில் போட்டி அட்டவணை முதற்கட்டமாக மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மொத்தம் 21 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.

22–ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் கவுண்டரில் ரசிகர்களுக்கு சரியாக டிக்கெட் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே விற்பனை செய்யப்படும். டிக்கெட்டுகளை பே டிஎம் மற்றும் இன்சைடர் இணைய தளத்தில் ரசிகர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை – பொங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்கியது. இன்று காலை 9:30 மணிக்கு துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த வெப்சைட் 9 மணியிலிருந்தே பலருக்கும் ஓப்பனாகவில்லை என சலசலப்பு ஏற்பட்டது. வெகு சிலரால் மட்டுமே லாகின் செய்து உள்ளே செல்ல முடிந்ததாகவும் ஆனால் அவர்களுக்கும் பணம் செலுத்த வேண்டிய இடத்தில் வெப்சைட் கிராஷ் ஆனதாகவும் கூறப்படுகிறது. அதன்பின் சில நிமிடங்களில் ஒட்டுமொத்த டிக்கெட்டும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அந்த வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *