செய்திகள்

கிரிக்கெட் வீரர்களுக்கு தனி விமானம் இயக்க கிறிஸ் லின் வேண்டுகோள்

மும்பை, ஏப்.27

ஐபிஎல் முடிந்த பிறகு வீரர்களுக்காக தனி விமானம் இயக்க வேண்டும் என ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிறிஸ் லின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இது தொடர்பாக கிறிஸ் லின், ‘நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலிய வீரர்களைத் தனி விமானம் மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா? என நான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டேன். 

எங்களை விட மிக கடுமையான சூழலில் மக்கள் இருப்பதை நான் அறிவேன். நாங்கள் மிகக் கடுமையான உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தே வருகிறோம். அடுத்த வாரம் தடுப்பூசி போட்டுக் கொள்ள இருக்கிறோம்.

எனவே, நாங்கள் தனி விமானத்தில் நாடு திரும்புவதற்கு அரசு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம்.  அபாயங்களை அறிந்தே  வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எனினும் ஐபிஎல் முடிந்த பிறகு பத்திரமாக தாயகம் திரும்பினால் சிறப்பாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *