செய்திகள்

ஐபிஎல் தொடரில் இருந்து அஸ்வின் திடீர் விலகல்

சென்னை, ஏப். 26–

நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விலகுவதாக அறிவித்துள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த 20 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் அஸ்வின் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், இந்த போட்டிக்கு பிறகு டெல்லி அணியின் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டுவீட்டர் பக்கத்தில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவீட்டரில் கூறியிருப்பது:–

நான் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் ஓய்வு பெறுகிறேன். குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இக்கட்டான நிலையில், அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். நிலைமை சரியாகும் பட்சத்தில், மீண்டும் விளையாட வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *