8 மணி நேரம் வரை தொடர்ந்து பாடல்கள் கேட்கும் வசதி
சென்னை, பிப்.14–
நவீன ஸ்மார்ட் போன்களில் ரூ.7 ஆயிரம் பிரிவில் நம்பர் ஒன் பிராண்டாக திகழும் ஐடெல் நிறுவனம் தனது எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது காதிற்கு மிகுந்த பாதுப்பு அளிக்கும் மற்றும் நாள் முழுவதும் இசையை மகிழ்ச்சியுடன் துல்லியமாக கேட்கும் வகையில் புதிய ‘டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் டி1’ என்னும் ஹெட் போனை அறிமுகம் செய்துள்ளது. இது இசை ஆர்வலர்கள் விரும்பும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1099 ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் இதை 8 மணி நேரம் பயன்படுத்தலாம். இது உயர்தர ஒலி அனுபவத்தை பயனீட்டாளர்களுக்கு வழங்குகிறது.
இதில் உள்ள 10.4 மிமீ பாஸ் பூஸ்ட் டிரைவர்கள் துல்லியமான இசையை கேட்க உதவுகிறது. இதில் 350எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் இசையை கேட்கலாம். இதை பயன்படுத்தாத நிலையில் 40 மணி நேரம் வரை இதில் சார்ஜ் இறங்காமல் இருக்கும்.
யூடியூப் சேனலில் சாஹி இசையை கேட்க விரும்பும் இசை ஆர்வலர்களுக்கு இந்த இயர் பட்ஸ் சிறந்த அனுபவத்தை வழங்கும். மேலும் இந்நிறுவனம் ஜூக்செட் என்53 பிடிவயர்லெஸ் இயர் போன்களையும் ரூ.799க்கு அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டும் இளம் தலைமுறையினரின் ஒட்டுமொத்த ஆடியோ அனுபவத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, இவை பயணத்தின் போது சிறந்த இசை அனுபவத்திற்கான உறுதியை அளிக்கிறது.
இது குறித்து டிரான்ஸ்ஷன் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அரிஜீத் தலபத்ரா கூறுகையில், ஆடியோ சாதனங்களுக்கான சந்தை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது, மேலும் தொற்றுநோய் பரவல் காரணமாக தனிப்பட்ட டிஜிட்டல் ஆடியோ சாதனங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. நுகர்வோரின் வாழ்க்கை முறை மாறி வருவதால், குறைந்த விலையில் இதுபோன்ற சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் நுகர்வோர் இசையை கேட்க விரும்பும் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக நாங்கள் தற்போது புதிய ‘டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்துள்ளோம். எங்களின் ஸ்மார்ட் கேட்ஜெட்கள் போர்ட்போலியோவில் இந்த சமீபத்திய சேர்த்தல் மூலம், குறைந்த விலையிலான வயர்லெஸ் ஆடியோ பாகங்கள் மூலம் நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்துவதுடன், இதுபோன்ற சாதனங்கள் விற்பனை சந்தையில் எங்கள் நிலையை மேலும் வலுப்படுத்துவது உறுதி என்று அவர் தெரிவித்தார்.