செய்திகள் நாடும் நடப்பும்

ஐசிசி குழப்பம்

Makkal Kural Official

தலையங்கம்


இந்திய கிரிகெட் அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இந்த பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதி யாரும் கலந்து கொள்ளாதது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நிலையில் பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதி யாரும் இல்லை. ஐசிசி சேர்மன் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலர் தேவஜித் சைகியா, நியூஸிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ரோஜர் ட்வூஸ் ஆகியோர் மட்டுமே மேடையில் இருந்தனர்.

.இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது மகிழ்ச்சியை தந்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியப் பிரதிநிதிகள் யாரும் மேடைக்கு அழைக்கப்படவில்லை, ஒருவர் கூட கோப்பையை தரும் நிகழ்வில் ஏன் இல்லை என்பது புரியாத புதிராகவே இருக்கும்.

எதிரும் புதிருமான இரு நாடுகளும் எல்லைப் பிரச்சனைகளுக்கு மேலும் தீ மூட்டலாய் மாறாமல் விளையாட்டை பொது நாடான துபாயில் நடத்த ஒப்புக் கொண்டோம்.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் அரசியல் பதட்டங்கள் காரணமாக கடந்த ஆண்டே பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யப் போவதில்லை என்று இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டது.

அன்றிலிருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு கடினமான சூழ்நிலையில் உள்ளது.

இந்தியா இல்லாமல் போட்டியை விளையாடவா? ஐசிசியின் வருமானத்தில் இந்திய சந்தைகள் கணிசமான பகுதியை உருவாக்குகின்றன, இது 80% வரை வெளிப்புறமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜியோஹாட்ஸ்டாரில் இறுதிப் போட்டிகளைப் பார்த்தவர்கள், கடைசி நேரத்தில் 83 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

அத்தகைய கிரிகெட் பாரம்பரியம் கொண்ட நாட்டை வெளியேற்றி விட்டு இந்த போட்டியை நடத்தினால் லாபகரமாக இருக்குமா? என்ற சிந்தனையுடன் செயல்பட்ட அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு உரிய மரியாதை தராது போய் விட்டார்களா? அது விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் அமைப்புக்கு தலைகுனிவு அல்லவா?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுமைர் அகமது துபாயில் இருந்தும் பரிசளிப்பு மேடைக்கு அழைக்கப்படவில்லை.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி, நாட்டின் உள்துறை அமைச்சராக இருப்பதால் அவரால் துபாய்க்கு வர முடியவில்லை.ஐசிசி தான் யார் யார் மேடைக்கு வர வேண்டும், பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *