செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை

துபாய், மே 25–

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குரங்கு அம்மை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபநாட்களாக குரங்கு அம்மை எனும் புதிய நோய் உலகில் பல நாடுகளில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒருவகை வைரசால் பரவும் நோயாகும். கொரோனா தொற்று போலவே இருமல், தும்மல் மூலம் இந்த வைரஸ் காற்றின் மூலம் அடுத்தவர்களுக்கு பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

முதல் குரங்கு அம்மை

ஐரோப்பாவில் முதன் முதலில் ஒருவர் குரங்கு அம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சிலருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல் குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுகாதார மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் முதல் குரங்கு அம்மை நோய் தொற்று இன்று உறுதிசெய்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 29 வயதான பெண்ணுக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுகாதார அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து உடல் பரிசோதனை மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.