செய்திகள்

ஏழை மக்கள் படிப்பிலும் பொருளாதாரத்திலும் முன்னேறுவது எப்படி?

ஏழை மக்கள் படிப்பிலும் பொருளாதாரத்திலும் முன்னேறுவது எப்படி?

திராவிட தேசம் தலைவர் கிருஷ்ணா ராவ் ஏற்பாடு செய்த கருத்தரங்கு

சென்னை, ஆக.11

“திராவிட தேசம்” சார்பாக காணொலி மூலமாக நடத்திய ” ஏழை மக்கள் படிப்பிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் முன்னேறுவது எப்படி” என்ற கருத்தரங்கு சென்னையில் நடந்தது. இந்தியன் வங்கி முன்னாள் தலைவரும் தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவருமாகிய எம். கோபால கிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

கருத்தரங்கில் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் வாழ்கின்ற ஏழை மக்களுக்கு சேவை செய்வதற்காகவே திராவிட தேசம் தலைவர் கிருஷ்ணாராவ் பணியாற்றுகிறார். அவர் முயற்சி செய்யும் அனைத்து திட்டங்களுக்கும் தமிழ்நாடு யாதவ மகாசபை உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் அரசு வேலைகளை மட்டும் நம்பி இல்லாமல் பல தொழில்களை சொந்தமாகவே நிறுவி படிப்பிலும், பொருளாதாரத்திலும் முன்னேறி பலபேருக்கு வேலை வாய்ப்பு தரும் அளவிற்கு முன்னேற வேண்டும் என்று சொன்னார்.

முன்னாள் காவல்துறை ஐஜி மற்றும் தற்போதைய ஆந்திர மாநில ஆர்டிஐ ஆணையருமாண பி.வி.ரமண குமார் பேசுகையில், தமிழகத்தில் திராவிட தேசம் செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தமிழ்நாட்டில் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு நேரடியாக கலந்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று சொன்னார்.

ஓஎன்ஜிசி துணை பொது மேலாளர் பியூஸ் சவுதரி பேசுகையில், “திராவிட தேசம்” என்பது தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது போன்ற மொழிகள் பேசும் அனைத்து மக்களின் நலனுக்காக பல ஆண்டுகளாக பணியாற்றுவதை மனமார பாராட்டுகிறேன் என்றும் தமிழ் மக்களுக்காக சேவை செய்ய தயாராக உள்ளேன் என்று கூறினார். ஒன்றுகூடி வாழ்கின்ற நாடு தான் தமிழ்நாடு என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க “திராவிட தேசம் “தலைவர் வி. கிருஷ்ணா ராவ் பேசுகையில், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் யாரேனும் “பால்” வியாபாரம் செய்வதற்கு முன் வந்தால் அவர்களுக்கு அரசு மூலமாக தேவையான உதவிகளை பெற்றுத்தர தயாராக உள்ளேன் என்றும், பால் உற்பத்திதாரர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து தாமாகவே ஒரு பால் சேகரிப்பு நிறுவனமும் தொடங்கலாம் என்று ஆலோசனை கூறினார்.

இந்த விஷயத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொறுப்பாளர்கள் முன்வந்து முழு விவரங்களுடன் ஒரு அறிக்கை திராவிட தேசம் அலுவலகத்தில் கொடுத்துவிட்டால் அவர்களை அரசு அதிகாரியிடம் நேராக அழைத்துச் சென்று நிச்சயமாக உதவி செய்வதற்கு தயாராக இருக்கின்றேன் என்று கிருஷ்ணாராவ் கூறினார்.

அதேபோன்று பிற தொழில்களிலும் மக்கள் முன்னேறுவதற்கு ஏதேனும் ஒரு நல்ல திட்டம் தயார் செய்து கொடுத்தால் நிச்சயமாக தமிழக அரசு மூலமாக செய்வதற்கு “திராவிட தேசம் ” எப்பொழுதும் தயாராக இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் முன்னேறினால் தானாகவே அரசியலிலும் முன்னேறுவீர்கள் என்றும் வருங்காலத்தில் ஏழை எளிய மக்கள் அனைவரும் எம்எல்ஏ, எம்பி ,அமைச்சர்கள் ஆகுவீர்கள் என்று கிருஷ்ணராவ் கூறினார்.

நிகழ்ச்சி இறுதியில் கமல்ஹாசன் நன்றி கூறினார். பேராசிரியர் பெரி கபிலன் தொழில்நுட்ப உதவி செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *