செய்திகள்

‘ஏலேலோ’ இசை ஆல்பம் வெளியீடு

Makkal Kural Official

சென்னை, ஏப் 17–

‘‘ஏலேலோ’’ இசை ஆல்பம் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத், விஜய் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய பிரமுகர் நடிகர் சௌந்தர் ராஜா, ஆல்பத்தில் நடித்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய சமூகத்தில் காதல் என்ற போர்வையில் பல தவறுகள் நடந்து கொண்டிருக்க அதை மறைமுகமாகவும் அழுத்தமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். நாயகன் வெற்றிவேல் முருகன். நாயகி –மோனா. தயாரிப்பு வி எம் ஐஸ்டேஜ் பிலிம்ஸ். இசை – ஜெய் கிரிஷ். கதிர் – ஒளிப்பதிவு. முருகானந்தம் – எடிட்டர் – கிஷோர்.

விழாவுக்கு வந்திருந்தவர்களை மக்கள் தொடர்பாளர் சரவணன், கார்த்தி வரவேற்றார்கள்.

இசை வெளியீட்டு விழாவில் ட்ரீம்ஸ் என்ற குறும்படத்தையும் திரையிட்டனர். ட்ரீம்ஸ் ஷார்ட் பிலிம் சார்பாக தயாரித்துள்ளனர்.

நடிகர்கள் : வினிதா, தேஜா உதயசங்கர், ஹரிணி, கல்பனா, மீரா, தயாரிப்பாளர் : அருள்மொழி பிச்சர்ஸ், இயக்குனர்: மணிகண்டன், இசை: ஜெய்கிஸ் கதிர், ஒளிப்பதிவு: குமரேசன், எடிட்டர்: சேவியர். கிராபிக்ஸ் டிசைனர் : நவீன் செல்வா.

வெற்றிகுரல்

‘ஸ்டில்’ சரவணன் நடிகர் விஜய்யின் – தனிப்பட்ட போட்டோகிராபர். இவர் சௌந்தர்ராஜா ‘‘வெற்றிகுரல்’’ என்று பெயர் சூட்டிய இணையதளத்திற்கு மக்கள் தொடர்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *