செய்திகள்

ஏலத்தில் விலைபோகாத சர்வாதிகாரி ஹிட்லர் ஓவியம்

பெர்லின், பிப். 11–

ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் வரைந்த ஓவியம் ஒன்று, ஏலத்தில் விலைபோகாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கியவரும், யூத மக்களைக் கூட்டமாக அழித்து இனப்படுகொலை நிகழ்த்தியவருமான அடால்ப் ஹிட்லர், ஓவியம் வரைவதிலும் வல்லவராக இருந்தவர். முதல் உலகப் போருக்கு முன்னர் வரை, வறுமைப் பிடியில் இருந்த ஹிட்லர், 2,000 ஓவியங்கள் வரை வரைந்தார். இந்நிலையில் அவ்வப்போது ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் பிரபல ஏல நிறுவனங்களால் உலகின் பல்வேறு இடங்களில் ஏலத்துக்கு விடப்படும்.

அந்த வகையில் ஜெர்மனியின் நுரம்பெர்க் நகரில் நடத்தப்பட்ட ஏலத்தில் , வாடிக்கையாளர்களால் ஹிட்லரின் படம் ஏலத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதுகுறித்து ஜெர்மனி பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், ”ஹிட்லர் வரைந்த அந்த ஓவியம் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும், அந்த ஓவியத்தின் ஆரம்ப விலை 21,500 டாலராக இருந்தது” என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஹிட்லரின் ஓவியங்கள் என்ற பெயரில் போலிகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன என்பதால், இந்த ஓவியங்கள் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *