செய்திகள்

‘ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளும் – சட்டதிட்டங்களும்’: தொழில்முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனத்தின் பயிற்சி

Spread the love

சென்னை, ஜூலை 20

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள், ஏற்றுமதி சட்டதிட்டங்கள் பற்றிய 3 நாள் பயிற்சியினை இம்மாதம் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நடத்த உள்ளது.

உலகமயமாக்கலின் விளைவாக, ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், பொருளை பதப்படுத்துதல், சீரிய முறையில் பேக்கிங் செய்தல், ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், இறக்குமதிக்கான சுங்கவரி கணக்கிடல் போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் சேரலாம். இப்பயிற்சி நடக்கும் இடம், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தங்கள் பெயரை நேரிலோ அல்லது தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் கைபேசி எண். 8668102600, இ மெயில் www.editn.in. முன்பதிவு அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *