செய்திகள்

ஏர் ஆம்புலன்சாக மாற்றப்பட்ட இந்திய கடற்படை விமானம்

புதுடெல்லி, மே 31–

இந்திய கடற்படை விமானம் ஏர் ஆம்புலன்ஸாக மாற்றப்பட்டு உள்ளது.

இந்திய கடற்படையின் ஏஎல்எச் மார்க் – 3 ரக விமானத்தில் அவசர சிசிச்சை பிரிவு (ஐசியு) வசதியை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் பொருத்தியுள்ளது.

இதன் மூலம் மோசமான வானிலை சமயத்தில், உயிருக்கே ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை கடற்படை விமானம் மூலம் கொண்டு செல்ல முடியும்.

கடற்படை விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஐசியுவில் 2 செட் டெபிரிலேட்டர்கள், மல்டி பாரா மானிட்டர்கள், வென்டிலேட்டர், ஆக்சிஜன் வசதி உள்பட பல வசதிகள் உள்ளன.

இந்த உபகரணங்கள் விமானத்தின் மின்வசதி மூலமாகவும் அவசர காலத்தில் பேட்டரியில் 4 மணி நேரம் வரையும் இயங்கும் திறனுள்ளவை. இந்த உபகரணங்களின் தொகுப்பை 3 மணி நேரத்தில் பொருத்தி ஒரு விமானத்தை ஏர் ஆம்புலன்சாக மாற்ற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *