செய்திகள் வர்த்தகம்

ஏர்டெல்லின் அதிவேக இன்டர்நெட் வசதி அறிமுகம்

சென்னை, அக். 31–

பார்தி ஏர்டெல் (ஏர்டெல்) நிறுவனம் கொள்ளை நோயைத் தொடர்ந்து, வீட்டிலிருந்தே அலுவல் பணி, ஆன்லைன் வகுப்பு, காணொலி ஸ்ட்ரீமிங்க் ஆகியவை உயர் வேகத் தரவுச் சேவைகளை ஏர்டெல் உயர்தர எல்டிஇ 900 தொழில்நுட்பம் மூலம் வாடிக்கையாளர்களின் வலைப்பணி அனுபவத்தை மேம்படுத்துகிறது. உயரிய சமிக்ஞை பரப்பு திறனும், நகரப் பகுதி உள்ளரங்குகளில் சிறந்த இணைப்புத் திறனும் இருப்பதால், கிராமப் பகுதிகளில் வலைப்பணி கிடைப்பதை உறுதிப்படுத்தும்.

இந்திய அரசு சமீபத்தில் நடத்திய எலம் மூலம் ஏர்டெல் நிறுவனம் 900 மற்றும் 1800 பேண்ட்களில் தமிழகத்துக்காக 20 கூடுதல் ஸ்பெக்ட்ரமைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக தரவு சேவைகளின் வளரும் தேவைகளை நிறைவு செய்ய ஏர்டெல் நிறுவனத்திடம் தமிழகத்தில் 65 எம்ஹெச்இசட் திறனுடனுன் வலுவான ஸ்பெக்ட்ரம் தொகுப்பு உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் முதல் 5ஜி அனுபவத்தை 4ஜி வலைப்பணியில் வழங்கியதைத் தொடர்ந்து, 5ஜி சேவை வழங்க ஏர்டெல் வலைப்பணி தயாராக உள்ளது என்று பார்தி ஏர்டெல் தலைமை செயல் அதிகாரி அமீத் திரிபாதி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *