செய்திகள்

ஏமன் நாட்டில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு தூக்கு தண்டனை ‘திடீர்’ நிறுத்தம்

Makkal Kural Official

ஏமன், ஜூலை 15–

கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா என்னும் நர்சுக்கு ஏமன் நாட்டில் விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை இன்று (செவ்வாய்) திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை (புதன்) தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்த நிலையில் இன்று அத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சத்தின் நடவடிக்கையை அடுத்து, ஏமன் அரசு, இந்த தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

கேரளா பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. வயது 36. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். பல மருத்துவமனைகளில் நர்சாக பணிபுரிந்த இவர், பின் அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் தலைநகர் சனாவில் சொந்தமாக கிளினிக்கை துவக்கினார்.

நிமிஷாவின் வருமானம் கிளினிக்கின் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு அவருக்கு தலால் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2017ல் தலாலுக்கு மயக்க மருந்து கொடுத்து, பாஸ்போர்ட்டை மீட்கும் முயற்சியில் நிமிஷா இறங்கினார். அவருக்கு அதிக மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் தலால் உயிரிழந்தார். அவரை நிமிஷா விஷ ஊசி போட்டு கொன்றதாக கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2023ல் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது என்பது நினைவிருக்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *