செய்திகள்

ஏப்ரல் 6–ந்தேதி தமிழகத்திற்கு பொது விடுமுறை

சென்னை, மார்ச்.17-

சட்டசபை தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6-ந் தேதி தமிழகத்திற்கு பொது விடுமுறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–- தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) மாதம் 6-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, ஏப்ரல் 6-ந் தேதியை பொது விடுமுறை தினமாக தமிழக கவர்னர் அறிவித்துள்ளார். அதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *