செய்திகள்

ஏப்ரல் 30ந் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை, மார்ச் 31–

தமிழகத்தில் ஏப்ரல் 30ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 30ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதிக்கலாம்

கொரோனா பரவல் சூழலுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும். மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *