செய்திகள்

ஏடிஎம் மையத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.3 லட்சம் கொள்ளை

4 பேர் கும்பல் கைது

ஐதராபாத், ஜூலை 16–

ஐதராபாத் அருகே, ஏடிஎம் மையத்தில் பணத்தை டெபாசிட் செய்தவரிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஹிமாயத் நகர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில், கடந்த 3ம் தேதி பணத்தை டெபாசிட் செய்துகொண்டிருந்த நபரின் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த மர்ம கும்பல், அவரிடம் இருந்த 7 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர். மேலும் அவரை பலமாக தாக்கிவிட்டு காரில் தப்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து திருட்டு சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 4 பேரை ஐதராபாத்தில் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கார், ஒரு பைக்கை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *