செய்திகள்

ஏடிஎம் கொள்ளையை தடுத்தவர் கொலை: 4 பேர் கைது

திருவாரூர், ஜூன் 19–

ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற ஒருவரை கொலை செய்தது தொடர்பாக, 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் அருகே திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள கூடூரில் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம்மை இரவு ஒரு மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் உடைக்க முயற்சி செய்ததாக தெரிகிறது.

அப்போது சப்தம் கேட்டு அருகில் வசித்தவர்கள் எழுந்து அவர்களை பிடிக்க முயன்றபோது நடைபெற்ற தாக்குதலில், கூடூர் நடுத்தெருவைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டது வடபாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த மதன், பிரதாப், ஆகாஷ், விஜயன் என்ற 4 பேர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *