செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 ஆயிரம்: போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைத்த வாலிபர்

காஞ்சீபுரம், ஆக. 4

காஞ்சீபுரம் அருகே மேல்கதிர்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபுதாஸ் (32), தனியார் நிறுவன ஊழியர்.

இவர் கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது அந்த இயந்திரத்தில் ரூ.10 ஆயிரம் கேட்பாரற்று கிடந்தது. அவருக்கு முன் பணம் எடுக்க வந்தவர் பணம் வந்தது தெரியாமல் சென்றிருக்கலாம் என்பதை உணர்ந்த அந்த வாலிபர் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணத்தை எடுத்துக் கொண்டு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியாவை நேரில் சந்தித்து ஒப்படைத்தார். பிறகு அவர் உரியவரிடம் அதை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். விசாரணை நடத்தி உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு உறுதியளித்து அவரது நேர்மையை பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *