செய்திகள்

ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலராக தியாகராஜன் பொறுப்பேற்பு

காஞ்சீபுரம். ஜூன் 29–-

உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் செயல் அலுவலராக செங்கல்பட்டு சக்திவிநாயகர் கோயில் செயல் அலுவலரான சோ.செந்தில்குமார் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார்.

செங்கல்பட்டில் சக்திவிநாயகர் கோயில் உள்ளிட்ட 11 கோயில்களின் திருப்பணிகளைக் கண்காணிக்க வேண்டியது இருப்பதால் அவர் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், காஞ்சீபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வரும் என்.தியாகராஜன் கூடுதல் பொறுப்பாக ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலராகப் பணியாற்றுவார் என இந்து சமய அறநிலையத்துறையின் வேலூர் சரக இணை ஆணையர் செ.மாரிமுத்து அறிவித்தார்.

இதையடுத்து, என்.தியாகராஜன் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *