செய்திகள்

ஏகாம்பரநாதர் கோவிலில் கிருமிநாசினி மருந்து தெளிப்பு

Spread the love

காஞ்சீபுரம், மார்ச் 30 –

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கவும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி கோயிலில் பக்தர்கள் கூட்டம் சேர்வதால், நோய் தொற்று ஏற்படும் என கருதி கோவில்களும் மூடப்பட்டன. ஆனால் ஆகம முறைப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபெற இருந்த பங்குனி உத்திரப் பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோவிலில் ஆகமப்படி நித்திய பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இதையொட்டி, தமிழக அரசின் உத்தரவின் பேரில் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் கோவிலுக்குள் உள்ளே நுழையும்போது முககவசம் மற்றும் அவர்களுக்கு கிருமி நாசினி மருந்து கைகளில் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்த பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலிக்குள் உள்ளே நுழையும் போது அர்ச்சகர்கள், பணியாளர்கள், பதிவேட்டில் கையெழுத்திட்டு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். வேறு நபர்கள் யாரும் அனுமதிக்கப் படுவதில்லை.

மேலும் கோவில் செயல் அலுவலர் சோ.செந்தில்குமார் மேற்பார்வையில், கோவிலை தூய்மையாக வைத்து கொள்ள, அர்ச்சகர்கள் பூஜைகள் செய்வதற்கு முன்பும், பூஜைகள் செய்த பிறகும், கோவில் உள்பிரகாரம், வெளி பிரகாரம் மற்றும் சன்னதிகளில், தூய்மை செய்யப்பட்டு கிருமி நாசினி மருந்தை, கோவில் ஊழியர்கள் தெளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *