செய்திகள்

ஏகனாம்பேட்டை நவநிதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Spread the love

காஞ்சீபுரம், நவ. 10

காஞ்சீபுரம் அருகே ஏகனாம் பேட்டை அடுத்த நவநிதேஸ்வரர் பேட்டை கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான ஸ்ரீ நவநிதேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு இன்று காலை கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது.

பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோபுர கலசத்தில் அர்ச்சகர்கள் ஊற்றினார்கள். அப்போது திரண்டிருந்த ஆண்களும் பெண்களும் ‘‘நவநிதேஸ்வரா நவநிதேஸ்வரா…’’ என்று பக்தி கரகோஷம் எழுப்பினார்கள். பிறகு கும்பாபிஷேக நீரை பக்தர்களின் மீது அர்ச்சகர்கள் தெளித்தனர். வந்திருந்த திரளான பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானங்கள், கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக கோவிலில் விக்னேஸ்வரர் பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி உள்பட பல்வேறு விசேஷ யாகங்கள் நடந்தன.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *