சினிமா

எஸ். பி. ஜி. கமாண்டோக்கள்: மானசரோவர் படையில் தனிப்பயிற்சி எடுத்தார் ‘காப்பான்’ சூர்யா!

Spread the love

சென்னை, செப். 17

உயிரைக் கொடுத்து அரசியல் தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் எஸ். பி. ஜி. கமாண்டோஸ் டோ அதிகாரி வேடத்தில் நான் நடிக்கும் படம்: காப்பான். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நான் நடித்திருக்கும் இப்படம் இம்மாதம் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திற்காக, கமாண்டோ அதிகாரிகளின் மானசரோவரில் இயங்கும் படைப் பிரிவில் சில நாட்கள் பயிற்சி எடுத்தேன் என்று சூர்யா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஒரு அரசியல் தலைவனின் முதல் கட்ட பாதுகாப்பு.

எஸ்.பி.ஜி. கமாண்டோ படையினர் தான்.இந்தியா முழுக்க சுமார் 3000 பேர் இப்படையில் இருக்கிறார்கள். அவர்களது பணி – தங்கள் உயிரை கொடுத்து அரசியல் தலைவர்களின் உயிரை காப்பாற்றுவது தான். உயிரைக் கொடுக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும்

மற்ற பணிகளில் இருப்பவர்கள் ஒதுங்கி இருக்கலாம். ஆனால் இவர்கள் அப்படி ஒதுங்கி இருக்கக் கூடாது தன்னை கொடுத்து அரசியல் தலைவரைக் காப்பாற்ற வேண்டும். தலைவர்களுடன் இவர்கள் அதிக நேரம் இருப்பதால் தலைவர்களோடு இவர்கள் நெருக்கம் ஆகி விடுவார்கள். அப்படி ஒரு கமாண்டோ அதிகாரியின் வேடம் தான் எனக்கு காப்பானில். மோகன்லால், ஆர்யா, பொம்மன் இரானி, சமுத்திரகனி என நிறைய அனுபவம் பேசும் நட்சத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் கதையோடு தான் வருவார்கள். அவர்கள் வரும்போது கதையின் ஓட்டம் மாறும் என்று அனுபவம் பேசினார் சூர்யா.

தனிமனிதன் வளர்ச்சி பற்றிய சுய முன்னேற்ற கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமூகத்தில் நடந்து கொண்டு இருக்கும் இதுவரை பதிவு செய்யாத ஒரு களம் கிடைத்தால் உடனே அதை ஒப்புக் கொள்வேன் அப்படி அமைந்தது தான் காப்பான் கதை. போலீஸ் ராணுவம் இரண்டிலுமே உயிரிழப்புக்கு வாய்ப்பு அதிகம். தன் உயிரை துச்சமென மதித்து தலைவருக்காக உயிர் கொடுப்பவன் தான் கமாண்டோ அதிகாரி என்று கதாபாத்திரத்தின் சிறப்பை விலகினார் சூர்யா.

பிரசாத் திரையரங்கு கட்டிடத்தில் நடந்த காப்பான் திரைப்பட விழாவில் நிருபர்களிடம் சூர்யா பேசினார். அப்போது அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

‘‘காப்பான் ’’ இசை வெளியீட்டு விழாவில் உனக்கு எத்தனாவது படம் இது?, என்று ரஜனி கேட்டார். 37 ஆவது படம் என்று சொன்னதும், 37 தானா …? என்று திரும்பக் கேட்டார். அதிசயப்பட்டார். இந்த ஆண்டு தொடங்கி செப்டம்பர் 20ஆம் தேதி வரை எனக்கு வெளிவரும் 2வது படம் காப்பான். முதல் படம் என். ஜி. கே. என்றார்.

கே.வி.ஆனந்த் சாரைப் பத்தி சொல்லும்போது அவர் எப்போதும் நிறைய யோசிகிறவர். ஒரு உண்மைக்கதையை சொல்லும்போது அதில் என்டர்டெயின்மென்ட்டை எவ்வளவு எப்படி சேக்கணும்கிறதுல கவனமா இருப்பார். இந்தப்படத்துல அவ்வளவு விஷய்ங்கள் சொல்லியிருக்கார். அது அத்தனையும் சொல்லிட முடியுமான்னு இருந்தது எனக்கு. ஆனா, அதைச் சரியா சொல்லிட்டார் அவர். அதுக்குத் துணையா இருந்தவர் பட்டுக்கோட்டை பிரபாகர் சார். அவர் எழுத்து எங்க வேலையைக் குறைச்சது.

இந்தப்படத்தை அவர் இன்னொரு நடிகருக்கு எழுதியிருந்தார். ஆனா, அது எங்கிட்ட வந்து சேர்ந்தது. என் வாழ்க்கையில எப்பவும் எனக்கு ஸ்பெஷலா அமைஞ்சது இன்னொருத்தருக்கு எழுதிய விஷயம் எங்கிட்ட வந்து சேர்ந்த படங்கள்தான்.

‘அயன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்தனர்

அயன் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவும் இயக்குநர் ஆனந்த்தும் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் காப்பான். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு இயக்குநர் ஆனந்த்தின் விருப்பமான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர் மோகன்லால் இந்தியப் பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் குழுவின் உயர் அதிகாரியாகவும் சூர்யா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *