செய்திகள்

எஸ்.ஆர்.எம்.மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை துவக்கம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூட்டுடன்

எஸ்.ஆர்.எம்.மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை துவக்கம்

வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் பெருமிதம்

சென்னை, ஆக.5–

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையம் உலக அளவில் பிரபலமாக உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா வைரஸ் நோய்க்கு உருவாக்கப்பட்டுள்ள கோவாக்கின் தடுப்பூசி மருந்தை செலுத்தி ஏற்படும் விளைவுகளை ஆராய்ச்சி செய்ய இதன் ஆராய்ச்சி மையத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர். எஸ்.ரவிக்குமார் மற்றும் ஆராய்ச்சி குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்று இதன் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் தெரிவித்தார்.

உலகமே ஆவலுடன் காத்திருக்கும் கொரோனா வைரஸிலிருந்து காத்துக்கொள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஆதரவுடன் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்ஸின் தடுப்பூசி இந்தியா முழுவதும் உள்ள 12 ஆராய்ச்சி மையங்களில் விலங்குகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொள்ள ஒப்புதல் அளித்தது.

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் கடந்த கால மருத்துவ பரிசோதனை அனுபவங்கள் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கட்டமைப்பு மற்றும் தலை சிறந்த ஆராய்ச்சி உபகரணங்கள் கூடிய ஆராய்ச்சி கூடங்கள், அந்நிறுவனம் சார்பில் அளிக்கப்படும் ஒத்துழைப்பு என பலவிதங்களில் தனியார் பல்கலைக்கழகங்களில் சிறந்து விளங்குவதால் தமிழகத்திலேயே இந்த ஒரு மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தில் மட்டுமே ஆராய்ச்சி மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டதாக எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் துணைவேந்தர் டாக்டர். எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார்.

இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதியுடன் முதல்கட்ட பரிசோதனையை எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கியது. இம்முறையில் தடுப்பூசியின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத வண்ணம் உறுதியுடன் முப்பது வகைகளில் குறிப்பிட்டபடி நல்ல திடகாத்திரமான வகையில் உள்ள 18 வயது முதல் 55 வயதுடைய நபர்களை கொண்டு முதல்கட்ட பரிசோதனையை துவங்கியுள்ளதாக எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆய்வாளர் டாக்டர். சத்தியஜித் மஹோபத்ரா மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருந்தியல் இணைப் பேராசிரியர் டாக்டர்.மெல்வின்ஜார்ஜ் தெரிவித்தனர்.

இந்த முதல்கட்ட தடுப்பூசியைப் பெற்றவர்கள் தற்போது வரை நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் உள்ளனர் எனவும் இவர்களுக்கு வரும் வாரங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசி அளிக்கப்பட உள்ளதாகவும் இவர்களின் முதற்கட்ட பரிசோதனை முடிவுகள் பாரத் பயோடெக் நிறுவனத்தின் உடன் ஒருங்கிணைந்து முழுமையான மதிப்பீட்டை சரிபார்த்து பின் தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக 12 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட ஆரோக்கியமான 100 தன்னார்வலர்களுக்கு பொது சுகாதார நிலை பரிசோதித்தும் கொரோனா வைரஸ் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்பே இந்த இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதன்பின் இரண்டாம்கட்ட தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு ஒன்பது நிலைகளில் இவர்களை மருத்துவ ஆராய்ச்சிக் குழு கண்காணிக்கும் எனவும் இதில் குறிப்பாக ஆன்ட்டிபயாடிக் உருவாக்கி அதன் செயல்பாடு காரணமாக கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைக்குமா என ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

எஸ்.ஆர்.எம். மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த ஆராய்ச்சி தவிர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

அங்கீகரிக்கப்பட்ட மருந்து ஆய்விலும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பற்றியும், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் முன்னணியில் இந்த நிறுவனம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *