செய்திகள்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர். பாரிவேந்தர் ரூ.2.15 கோடி நன்கொடை

Spread the love

சென்னை, ஏப். 2–

இந்தியாவிலிருந்து கொரோனாவை முற்றிலும் பரவுவதை தடுக்க எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நிறுவனர் டி.ஆர். பாரிவேந்தர் ரூ. 2.15 கோடி நிதி உதவி வழங்கினார்.

தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடியுடன் உலகம் போராடி வரும் இந் நேரத்தில் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது..

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கபட்டோர்களுக்கான நல உதவிகள் செய்ய செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சார்பில் அதன் நிறுவனரும் வேந்தரும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர். பாரிவேந்தர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் ரூபாய் 1.15 கோடி ரூபாயினை முதல்வரின் நிவாரண நிதிக்கு ஆன்லைன் மூலம் அளித்துள்ளார். டி.ஆர். பரிவேந்தர் தனது பெரம்பலூர் தொகுதியில் கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்து தனது நாடாளுமன்ற உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் உறுப்பினர் நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி அதற்கான கடிதத்தினை அளித்தார்.

அதனை தொடர்ந்து டி.ஆர். பாரிவேந்தர், வாரணாசியில் சிக்கித் தவித்த தனது தொகுதியைச் சேர்ந்த 56 பேரை காப்பாற்ற பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் கடிதம் எழுதினார்.

சிக்கித் தவிக்கும் மக்கள் தங்கியிருந்த காசி ஸ்ரீ குமார சுவாமி மடத்திற்கு தனது தனிப்பட்ட நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்து 12 ஆயிரம் நன்கொடை- வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *