ஹோட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மெண்ட் துறை எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் சென்னை சிட்டி கேம்பஸ் இணைந்து 2 நாள் பயிற்சிப் பட்டறை
சென்னை, செப். 1
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் சென்னை சிட்டி கேம்பஸில் அறிவியல் மற்றும் மானுடவியல் புல ஹோட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மெண்ட் துறை சார்பில் மாநில அளவிலான 2 நாள் பயிற்சிப்பட்டறை நடந்தது. இப்பயிற்சிப்பட்டறையில் மாலிக்குலர் கேஸ்ட்ரானமி, கோல்டு கட்ஸ், பிளேட்டிங் ஆர்ட்டிஸ்ட்ரி உள்ளிட்ட உணவகத் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.
உணவக மேலாண்மைத்துறையில் காலத் தேவைக்கேற்ப நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டியதன் கட்டாயத்தையும் வளர்ந்து வந்த தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் வகையிலும் இப்பயிற்சிப் பட்டறை நடந்தது. நிகழ்வில் வரவேற்புரையாற்றிய பேராசிரியர் ரத்தன் எல். சாஹு பாரம்பரிய சமையல்கலையின் எல்லைகளை அறிந்து நவீன அறிவியல் கோட்பாடுகளுடன் அவற்றை ஒருங்கிணைத்து வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஓசூரில் உள்ள ஏசிசிஏஎஸ்ஐ இயக்குநர் செஃப் மேத்யூ ஸ்டீபன்சன் மற்றும் மாலிக்குலர் காஸ்ட்ரோனமியில் நிபுணத்துவம் பெற்ற மைசூர் சமையல்கலை வித்தகர் பி. ஆண்டனி பிரபு ஆகியோர் தலைமையில் அறிமுக அமர்வு அரங்கேறியது. உணவக மேலாண்மையின் எதிர்காலப் போக்குகள் தொழில்நுட்பங்கள், வேலைவாய்ப்புகள் குறித்த விரிவான பார்வையைத் தமது உரையில் இருவரும் வழங்கினர்.
குறிப்பாகத் தற்காலத்தில் உணவக மேலாண்மையில் பெரும் பாய்ச்சலை உருவாக்கியுள்ள மாலிக்குலர் காஸ்ட்ரோனமி, கோல்ட் கட்ஸ் மற்றும் ப்ளாட்டிங் ஆர்டிஸ்ட்ரி ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் நுட்பங்களை மாணவர்கள் அறியச் செய்ததோடு இத்தகைய மேம்பட்ட பயிற்சிகளை வழங்குவதில் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் முன்னணியில் உள்ளதையும் அறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
நிறைவு விழாவில் கலந்து கொண்ட எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன இயக்குநர் எஸ். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினர்களையும் மாணவர்களையும் பாராட்டுச் சான்று அளித்தார்.
அறிவியல் மற்றும் மானுடவியல் புலத் தலைவர் கே.ஆர். அனந்தபத்மநாபன் உணவக மேலாண்மைத் துறையின் நவீன மயமாக்கல் மற்றும் அதில் விரிந்து வளர்ந்துள்ள வேலைவாய்ப்புகள் அதற்கு உறுதுணையாக உள்ள இத்தகைய பயிற்சிகளின் முக்கியத்துவம் ஆகியவற்றைச் எடுத்துக்காட்டிப் பயிற்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டினார்.
எஸ்.ஆர் எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவன மாணவர்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.