வர்த்தகம்

எவர்வின் பள்ளியில் ஆன்லைனில் கார்ட்டூன் பாடங்களுக்கு சாதனை விருது

சென்னை, பிப். 21

சென்னையில் உள்ள எவர்வின் பள்ளி குழுமம் சிறந்த கல்விக்கான தொடர் விருதுகளை பெற்று வருகிறது என்றும், தற்போது ஆன்லைன் வழியாக நவீன தொழில்நுட்பத்தில் அனிமேஷன் வகுப்புகள் நடந்து வருகின்றன என்றும், இது வகுப்பறையில் கல்வி கற்பது போன்ற சூழலை மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்றும் பள்ளிக் குழுவின் சி.இ.ஓ. மகேஸ்வரி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

சென்னையில் சிறந்த கல்வி குழுமமாக எவர்வின் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1992ம் ஆண்டில் சென்னை கொளத்தூரில் 78 மாணவர்களுடன் தொடங்கிய இப்பள்ளி, தற்போது ஒரு மெட்ரிக் பள்ளி மற்றும் 4 சிபிஎஸ்சி பள்ளி என 4 பகுதிகளில் 5 பள்ளிகளை நடத்தி வருகிறது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள்.

தரமான கல்வி மற்றும் பல்வேறு திறன் சார்ந்த பயிற்சி வகுப்புகள் என மாணவர்கள் சமூகத்தில் மேம்பாடைவதற்காக அனைத்துவித பயிற்சிகளும் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன. கல்வியில் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுகளிலும் மாவட்டம் மற்றும் மாநில அளவில் இந்தப் பள்ளி குழுமம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

சென்னையில் கொளத்தூர், பெரம்பூர், மதுரவாயல், மாத்தூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் இந்தப் பள்ளி சிறந்த கல்விக்கான உயரிய விருதுகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக பெற்று சாதனை படைத்து வருகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை எங்களது 4 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளாக சென்னையின் ‘‘டாப் ஸ்கூல்’’ விருதுகளை வழங்கி உள்ளது. இது வித்தியாசமான, உன்னதமான எங்கள் கல்விமுறைக்கு கிடைத்த அங்கீகாரம். மாணவர்களின் நலனுக்காக சிறந்த ஆசிரியர்கள் உள்ளடங்கிய எங்கள் பள்ளிக் குடும்பம் தொடர்ந்து சீரிய பயிற்சியை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் இது போன்று வழங்கப்படும் விருதுகள் எங்களது தரத்தை வெளிக்காட்டுவதுடன், இன்னும் கூடுதல் வளர்ச்சியை எட்ட உத்வேகமாக அமைகிறது.

இது தவிர 2014ம் ஆண்டில் இத்தாலி நாட்டின் யூனிமிலனோ பல்கலைக்கழகம் வழங்கிய சிறந்த சர்வதேச நியூஜென் பள்ளி விருது, 2018ல் இலங்கை அரசு வழங்கிய எம்.ஜி.ஆர். ரத்னா விருது, பள்ளியின் மூத்த முதல்வர் புருஷோத்தமன் பெற்ற தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது போன்ற பல விருதுகளை எங்கள் பள்ளி குழுமம் பெற்றுள்ளது.

வகுப்பறை கல்வி இல்லாத சூழலிலும் ஆன்லைன் வழியாக ஆக்மண்டட் ரியாலிட்டி(ஏ. ஆர்.) 2 டி, 3 டி அனிமேஷன் போன்ற தொழில்நுட்பங்களை கையாண்டு வகுப்பறை கல்வி போலவே மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தரப்பட்டு வருகிறது. இதனால்தான் 98% மாணவர்கள் ஆன்லைன் கல்வியை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி

இது தவிர இப்பள்ளிகளில் வழக்கமாக நடைபெறும் வாசிக்கும் முகாம், ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி, மாறுவேடப் போட்டிகள், நேர்காணல் பயிற்சி, திறன் சார் நிகழ்ச்சிகள், பல்வேறு கண்காட்சிகள் போன்றவையும் ஆன்லைன் மூலம் இந்த ஆண்டு நடத்தப்பட்டது. இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு (9 முதல் 12ம் வகுப்பு வரை) 95% மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் என்று மகேஸ்வரி தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை உள்பட மேலும் விவரங்களுக்கு: கொளத்தூர் 044 25561100, பெரம்பூர் 044 26621100, மதுரவாயில் 044 23781107, மாத்தூர் 044 25552266 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *