சிறுகதை

எழுத்துப்பிழை – ராஜா செல்லமுத்து

தன் பெயருக்குத் தகுந்த மாதிரியே தமிழமுதன் தமிழ் மீது தீராத காதல் கொண்டவன். இலக்கியம், இதிகாசம், சமயம் ஆன்மீகம் ,கவிதை, கட்டுரை. கதை சிறுகதை ,நாவல் என்று எல்லா தளங்களிலும் தன் கவனத்தைச் செலுத்தி இருந்தான்.

தமிழை ஆழப் படித்ததால் அதன் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம்உண்டு என்பான். ஒற்றுப் பிழை சந்திப்பிழை கண்டால் வரும் கோபமும் அவனுக்கு இயல்பாகவே இருந்தது.

அதனால் தமிழமுதனிடம் ஏதாவது தமிழ் சம்பந்தமாக பேசுவதென்றால் சிலர் பயப்படுவார்கள். சிலர் நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கிக் கொள்வார்கள்.

அவன் தமிழ் மீது கொண்ட ஆளுமை அப்படி.

ஒருமுறை ஒரு வங்கிக்கு தமிழமுதன் செல்ல வேண்டியிருந்தது.

அங்கே காசோலையை எழுதிப் போடுவதற்காக சென்றான்.

அங்கு பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு வாசகம் அவன் கண்களில் பட்டது அதை பார்த்ததும் அவனுக்கு கடுமையான கோபம் வந்தது.

“இங்கு பணம் செழுத்தவும்” என்று ‘லு’வுக்குப் பதில் சிறப்பு “ழ” கர ‘ழு’வைப் போட்டு வைத்திருந்தார்கள். அவனுக்கு கோபம் கண்டு மூச்சு வாங்கியபடியே அந்த எழுத்தை பார்த்து கடுமையாகக் கோபம் கொண்டான்.

தான் கொண்டு போன காசோலையைச் செலுத்தாமல் நேரடியாக அங்கே அமர்ந்திருக்கும் ஒரு வங்கி ஊழியரிடம் சென்று,

என்னுடைய பெயர் தமிழமுதன் இங்க பணம் ‘செழுத்தவும்’ அப்படின்னு தப்பா எழுதிருக்காங்க. சிறப்பு ழுகரம் போடக்கூடாது. குண்டு லு தான் போடணும். இதை யார் எழுதினது? என்று கடுமையான கோபத்தில் அந்த வங்கி ஊழியரிடம் கேட்டபோது

அங்கிருந்த வங்கி வாடிக்கையாளர்கள் தமிழமுதன் பேச்சைக் கேட்டு சற்று திரும்பிப் பார்த்தார்கள்.

இந்த வங்கிக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேர் வந்து போறாங்க. இந்த போஸ்டரை ஒட்டி மூணு நாலு மாசத்துக்கு மேல் ஆச்சு யாருமே இதைப்பற்றி கேட்கலே? நீங்க மட்டும் ஏன் கேக்குறீங்க ?என்று சவுடாலாக பதில் சொன்னார் அந்த வங்கி ஊழியர் .

இது தமிழ்நாடு. தமிழுக்கு இங்க மரியாதை உண்டு. எனக்கு தமிழ் தவறா எழுதி இருந்தா அது யாரா இருந்தாலும் கோபம் வரும்; யாருகிட்டயும் அதைப் பற்றி நான் விவாதம் செய்வேன்.திருத்துவேன்.

இங்க இவ்வளவு பேர் வந்து போற இடத்தில ஒரு தப்பான தமிழ் இருக்கும் போது ,அதைப் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது. அதுதான் நான் உன்கிட்ட சொன்னேன் .முடிஞ்சா அத மாத்துங்க இல்ல. இப்பவே அத நான் மாத்தி எழுதி அதை ஒட்டி வைக்கிறேன் என்றான் தமிழமுதன்.

சார் இத நீங்க மேனேஜர் கிட்ட போய் சொல்லுங்க என்று அந்த வங்கி மேலாளருக்கு வழி காட்டினார் அந்த ஊழியர்.

வணக்கம் என்று சொல்லியபடியே மேலாளர் அறைக்குள்ளே நுழைந்தான் தமிழமுதன்,

இங்கு பணம் செழுத்தவும் என்ற ழு வை பற்றி அந்த வங்கி மேலாளிடம் பேசினான்.

அவரும் அந்தத் தவறை ஒத்துக் கொண்டு

நாங்கள் டைப் பண்ணலங்க. வெளிய டைப் பண்ணினாேம். அதில் தவறு நடந்துருச்சு என்றார் அந்த மேலாளர் .

அது சரி சார் நீங்க ஒரு முறை சரி பார்க்கணும். இது வங்கி சம்பந்தமான விஷயம் .எழுத்து ரொம்பமுக்கியம் சார். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருள் இருக்கு .

உதாரணமா வலி அப்படின்னு குண்டு லி போட்டீங்கன்னா, அது நம்மாேட உடம்பு வலி, அத ஆங்கிலத்தில் Pain அப்படின்னு அர்த்தமிருக்கு.

வளி அப்படின்னு பொது லகரம் போட்டீங்கன்னா ,காற்று, ஆங்கிலத்தில் Air அப்படின்னு அர்த்தமிருக்கு.

வழி அப்படின்னு நீங்க சிறப்பு ழகரம் போட்டீங்கன்னா, நடந்து போற பாதை, ஆங்கிலத்தில The way, path அப்படிங்கிற அர்த்தம் இருக்கு.

அதனால ஒரு சொல் தானே ஒரு வார்த்த தானே அப்படின்னு நீங்க தவறா நினைச்சுக்க கூடாது

ஒன்னு தெரியுமா சார்? இரண்டாம் உலகப் போருக்கு முதல் காரணமே மொழி தான் அப்படிங்கறது எத்தனை பேருக்கு தெரியும் என்று தமிழமுதன் கேட்டபோது,

அவனின் கூர்மையான அறிவை பார்த்த அந்த வங்கி மேலாளர் தமிழமுதனுக்கு காபி வரவழைத்தார்.

சார் நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க. பொது அறிவு உங்களுக்கு நிறைய இருக்கு. என்ன பண்றீங்க ?என்று தமிழமுதனை விசாரித்தார் அந்த மேலாளர்.

இல்ல சார் நான் சும்மாதான் இருக்கேன் என்று சிரித்தபடியே சொன்னான் தமிழமுதன்.

இல்ல சார் நீங்க ஏதோ பண்றீங்க; ஆனா என்கிட்ட மறைக்கிறீங்க; ஆனா உங்களோட அறிவை நான் மதிக்கிறேன் சார் .

சரி அந்த ஜப்பான்ல இரோஷிமா நாகசாகியில அமெரிக்கா குண்டு போட்டதுக்கு என்ன காரணம்னு சொல்லுங்க சார் என்றார் மேலாளர்

இவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்து கொண்டு இது கூட தெரியாமல் இருக்கிறாரே என்று நினைத்த தமிழமுதன்,

அது ஒன்னும் இல்ல சார் அமெரிக்கா காரங்க ஜப்பான் மீது போர் தொடுக்க போறோம்; அப்படின்னு ஒரு கடிதம் எழுதி ஜப்பானுக்கு அனுப்பி இருக்காங்க .

அந்தக் கடிதத்தை படித்துப் பார்த்த ஜப்பானியர்கள், பதில் கடிதம் ஆங்கிலத்தில் எழுதாம ஜப்பான் மொழியில் எழுதி இருக்காங்க. அந்தக்கடிதம் அமெரிக்கா வந்து சேர்ந்திருக்கு.

அதுல என்ன எழுதியிருந்ததுன்னா சார்

– ஜப்பான் காரங்க அந்த போரை பரிசீலனை செய்கிறோம் அப்படின்னு தான் கடிதம் எழுதி இருக்காங்க.–

ஆனா அதை ஜப்பான் மொழிய மொழிபெயர்த்தவங்க

பாேரை நிராகரிக்கிறோம் அப்படின்னு தப்பா மாெழி பெயர்த்து சொல்லிட்டாங்க.

ஒரு குட்டி நாடு நம்மளுடைய பேச்சைக் கேட்காம வேற மாதிரி எழுதி இருக்காங்களே ,அப்படின்னு கோபப்பட்டாங்க.

அதனுடைய விளைவு; அதனுடைய கோபம் தான், இரோசிமா நாகசாகியில அமெரிக்காகாரவங்க குண்டு போட்டது சார் . அதனால மொழி தானே ,ஒரு வார்த்தை தானே. ஒரு சொல் தானேன்னு நீங்க எதுவும் தப்பா நினைச்சிடக் கூடாது. .தமிழுக்கு ஒரு வார்த்தையில ஆயிரம் அர்த்தம் இருக்கு சார் என்று தமிழமுதன் அந்த வங்கி மேலாளரிடம் சொன்ன போது மேலாளருக்குப் புல்லரித்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது .

அதற்குள் வாசலில் நின்ற ஒரு பணியாளர்

சார் காபி வந்துருச்சு என்று சொல்ல

ஆவி பறக்கும் காபியை மேலாளருக்கும் தமிழமுத்திற்கும் வைத்தார் அந்த ஊழியர்.

சார் காபி சாப்பிடுங்க என்று அந்த மேலாளர் சொன்னபோது

ரொம்ப நன்றி சார் என்று ஆவி பறக்கும் அந்தக் காபியைத் தமிழோடு அருந்த ஆரம்பித்தான் தமிழமுதன்.

மேலாளர் எழுந்து போய் தவறாக அச்சிட்டிருந்த எழுத்தை திருத்தி எழுதினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *