செய்திகள்

எழிச்சூரில் கொரோனா பராமரிப்பு மையம்: காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரம், மார்ச் 26–-

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட எழிச்சூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தங்கும் விடுதியான 500 படுக்கைகள் கொண்டு தயார் நிலையில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் அமைந்துள்ள உள்கட்டமைப்பு வசதிகளான படுக்கை அறைகள், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளான குன்றத்தூர் வட்டம் கொலப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்லாவரம் அறிஞர் அண்ணா கன்டோன்மெண்ட் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.ஜெயசுதா, ஆலந்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, காவல்துறை உதவி ஆணையர்கள் ஈஸ்வரன், அசோகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் லட்சுமி, சரவணன், தேர்தல் அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *