செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

எல்.ஐ.சி.யின் ‘பீமா சகி யோஜனா’ திட்டம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

Makkal Kural Official

கடந்த 8 மாதங்களில் நாடு முழுவதும்

1.80 கோடி வாகனங்கள் பதிவு

–––––––––––––––––––––––––––

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு தகவல்

–––––––––––––––––––––––––––––

சென்னை, டிச.10-–

கடந்த 8 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 1.80 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘படா’ தெலுங்கானா தவிர்த்து நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி 26 லட்சத்து 15 ஆயிரத்து 953 இருசக்கர வாகனங்கள், 1 லட்சத்து 8 ஆயிரத்து 337 ஆட்டோ, 3 லட்சத்து 21 ஆயிரத்து 943 தனிநபர் பயன்பாட்டுக்கான கார்கள், 80 ஆயிரத்து 519 டிராக்டர்கள், 81 ஆயிரத்து 967 வணிக பயன்பாட்டுக்கான வாகனங்கள் என மொத்தம் 32 லட்சத்து 8 ஆயிரத்து 719 வாகனங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் 28 லட்சத்து 32 ஆயிரத்து 944 வாகனங்கள் பதிவாகியிருந்தது. அக்டோபர் மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த மாதம் 13.26 சதவீதம் வாகனங்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 லட்சத்து 85 ஆயிரத்து 317 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 8 மாதங்களில் 1 கோடியே 32 லட்சத்து 59 ஆயிரத்து 744 இருசக்கர வாகனங்கள் உள்பட 1 கோடியே 79 லட்சத்து 92 ஆயிரத்து 631 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1 கோடியே 62 லட்சத்து 14 ஆயிரத்து 47 வாகனங்கள் பதிவாகியிருக்கின்றன.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டு 8 மாதத்துக்கான வாகன பதிவு 10.97 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து ‘படா’ தலைவர் சி.எஸ்.விக்னேஷ்வர் கூறும்போது, நவம்பர் மாத வாகன பதிவை பார்க்கும்போது ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகள் திறன் குறைவாக உள்ளதாக டீலர்கள் பரிந்துரைக்கின்றனர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *