செய்திகள்

எல்.ஐ.சி. பிரீமியம் செலுத்தாததால் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க ஏற்பாடு

சென்னை, ஆக. 11–

பாலிசிகளை எடுத்து பிரீமியம் செலுத்த முடியாமல் காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள எல்ஐசி நிறுவனம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இதன்படி ஆகஸ்ட் 10ம் தேதி (நேற்று) முதல் வரும் அக்டோபர் 9ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பாலிசிதாரர்கள் தாங்கள் கடைசியாக பாலிசிக்கான பிரீமியம் செலுத்திய தேதியில் இருந்து 5 ஆண்டுகள் வரை காலாவதியாகி உள்ள பாலிசிகளை புதுப் பிக்கலாம். அதேசமயம், மருத்துவ பரிசோதனை தேவைப்படும் பாலிசிகளுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.

மேலும் காலதாமதமாக செலுத்தப்படும் தகுதி வாய்ந்த பாலிசிகளுக்கான பிரீமியத் தொகைக்கான அபராதத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.1 லட்சம் வரையிலான பிரீமியத் தொகைக்கான அபராதத் தொகையில் 20 சதவீதமும், ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான பிரீமியத் தொகைக்கு 25 சதவீதமும், ரூ.3 லட்சம் மற்றும் அதற்கு மேல் உள்ள பிரீமியத் தொகைக்கு 30 சதவீதமும் சலுகை வழங்கப்படும். அதே சமயம் டேர்ம் அஷ்யூரன்ஸ், மருத்துவம் மற்றும் அதிக ரிஸ்க் உள்ள பாலிசிகளுக்கு இச்சலுகை பொருந்தாது.

எனவே பாலிசிதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொண்டு அதற்கான பலன்களைப் பெறுமாறு, எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *