புதுடெல்லி, ஏப். 14–
பிரதமர் மோடி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு தமிழில் பிரதமர் மோடியின் கையெழுத்துடன் வாழ்த்து அட்டை தயாராகி உள்ளது.
அந்த வாழ்த்து அட்டையில் உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்ற தலைப்பில் வாழ்த்து செய்தி இடம் பெற்றுள்ளது.
அதில்,”இந்த குரோதி வருட புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாழ்த்து அட்டை தமிழகம் முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு வழங்க பாரதீய ஜனதா திட்டமிட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி, வெற்றி
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ் கலாச்சாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக திகழும் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் ஆண்டு அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும். இந்த ஆண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவைக் கொண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.