செய்திகள்

எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா: இந்திய படைகளும் குவிப்பு

லடாக், மே 24

இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து வீரர்களை குவித்து வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் இந்திய படைகளும் குவிக்கப் பட்டுள்ளன.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் வலுக்க தொடங்கி உள்ளது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. முக்கியமாக லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது.

கடந்த 4 மாதங்களில் மட்டும் லடாக் எல்லையில் சீனா 140 முறை அத்துமீறி உள்ளது.முக்கியமாக அங்கு இருக்கும் பாங்காங் டிசோ பகுதியில் உள்ள நதியில் தொடர்ந்து சீனா அத்து மீறி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து வீரர்களை குவித்து வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் அங்கு இப்படி நடந்தது இல்லை என்று கூறுகிறார்கள். பாங்காங் டிசோ பகுதியில் தற்போது சீன வீரர்கள் தங்கும் டெண்ட்களை அமைத்துள்ளது.

100 டென்ட்கள்

100 டென்ட் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் அதிகமாக வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதி நவீன ஆயுதங்களை சீனா அங்கு குவித்துள்ளது.

சீனா போருக்கு தயார் ஆவதற்கான அறிகுறி இது என்று கூறுகிறார்கள். சீனாவின் இந்த செயல் மேலும் பிரச்சனை ஏற்படுத்தும் என்கிறார்கள். அதோடு பாங்காங் டிசோ பகுதியில் சீனா தற்போது பங்கர்கள் எனப்படும் பதுங்கு குழிகளை அமைத்து வருகிறது. 100க்கும் அதிகமான பதுங்கு குழிகளை சீனா அமைத்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த சில வருடங்களாக இந்த 4 இடங்களில்தான் சீனா தொடர்ந்து அத்து மீறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமாக பாங்கொங் திசோ, டிரிக் ஹைட்ஸ், புர்ட்ஸ் மற்றும் டிச்சு ஆகிய நான்கு இடங்களில்தான் அதிகமாக சீனா அத்து மீறி உள்ளது.

சீனா தொடர்ந்து லடாக் மீதுதான் குறி வைத்து வருகிறது. இதனால் இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே எல்லையில் சோதனை நடத்தினார். லடாக்கில் லே அருகே இருக்கும் சீன எல்லையில் சோதனை செய்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக் பகுதியில் இந்தியாவும் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *