செய்திகள்

எல்ஐசியில் உரிமை கோரப்படாத கையிருப்பு தொகை ரூ.21,538 கோடி

நிதித்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி, மார்ச் 15–

எல்ஐசி நிறுனத்திடம் உரிமைக் கோரப்படாத கையிருப்பு தொகை 21,538 கோடி ரூபாய் உள்ளதாக நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஒரு கேள்வி எழுப்பினார். அதில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் பாலிசிதாரர்களால் உரிமைக்கோரப்படாத தொகை எவ்வளவு உள்ளது என்று கேட்டு இருந்தார். அதற்கு பதிலளித்துள்ள மத்திய நிதித்துறை அமைச்சகம், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ந்தேதி வரையில், எல்ஐசி நிறுவனத்திடம் உரிமை கோரப்படாத தொகையாக 21 ஆயிரத்து 538 கோடி ரூபாய் கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி மட்டும் ரூ.2911 கோடி

அதுமட்டுமில்லாமல், மேற்கூறிய தொகையின் வட்டியின் மூலமாக சுமார் 2911 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமை கோரப்படாத பணத்திற்கு உரிய பாலிசிதாரர்கள், அடுத்த 25 ஆண்டுகள் வரை அந்த தொகையின உரிமையை கோருவதற்கு தகுதி உடையவர்கள் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.