வாஷிங்டன், ஜூலை 6-
அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனருமான எலோன் மஸ்க், ‘அமெரிக்கா பார்டி’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் இந்தக் கட்சி போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னணிப் பிரமுகர்களில் ஒருவரான எலோன் மஸ்க், தற்போது அரசியலிலும் கால் பதிக்கிறார். நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், “சாதாரண மக்களின் குரல் அரசியலில் பிரதிபலிக்க வேண்டும். நவீன தொழில்நுட்பம், சுதந்திரம், சீர்திருத்தம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ‘அமெரிக்கா பார்டி ‘ கட்சி உருவாக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.
இந்த கட்சியின் முக்கிய நோக்கங்களாக சுதந்திர பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அரசு முதலீடுகள், அரசு மரபுகளை சீரமைக்கும் திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதாரத்தில் மாற்றங்கள் பட்டியலிட்டுள்ளார் மஸ்க்.
அவரது தற்போதைய தொழில்துறையை நிர்வகிக்கும்போது, அரசியலில் ஈடுபடுவதே கடினமான முடிவாக இருந்தது என கூறிய மஸ்க், ஆனால் இது ஒரு ‘மக்கள் இயக்கம்’ ஆக மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
#Elon Musk political party #America Party Elon Musk #Elon Musk US Politics Tamil #எலோன் மஸ்க் அரசியல் கட்சி #Elon Musk news in Tamil #Political startup USA Elon Musk #Tesla SpaceX CEO politics #அமெரிக்க அரசியல் புதிய கட்சி #Elon Musk Tamil News Today
![]()





