செய்திகள்

எரிவாயு குழாய் உடைப்பு: சீனாவில் 25 பேர் உயிரிழப்பு

பீஜிங், ஜூன் 15–

சீனாவின் ஷியான் நகரத்தில் நடைபெற்ற எரிவாயு குழாய் உடைப்பு விபத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஊபேய் மாகாணத்தில் உள்ள ஷியான் நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எரிவாயு குழாய் உடைப்பு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமையில் 12 ஆக இருந்தது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி 25 ஆக உயர்ந்துள்ளது. ஊபேய் மாகாணத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி, விபத்து தொடர்பாகச் செய்தியாளரைச் சந்தித்த போது இத்தகவலை தெரிவித்தார்.

சீன காவல்துறையின் அறிக்கைப்படி இந்த விபத்தில் 138 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனாவில் இதுபோன்ற விபத்துக்கள் பல முறை நடைபெற்றுள்ளது.

2015ம் ஆண்டில், டையன்ஜினில் நடைபெற்ற எரிவாயு குழாய் உடைப்பு விபத்தில் 173 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோல் 2013-ல் எண்ணெய் குழாய் விபத்தில் 60 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *