வர்த்தகம்

எம்ஜி மோட்டார்ஸின் சொகுசு கார் மேம்படுத்தப்பட்டு அறிமுகம்

கோவை, பிப். 10–

எம்.ஜி மோட்டார்ஸ் கூடுதல் சக்தி கொண்ட பேட்டரியுடன் மேம்படுத்தப்பட்ட ‘இசட்எஸ்இவி’ சொகுசு காரை அறிமுகம் செய்துள்ளது. தற்போது 31 நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 5 ஆண்டுக்கு உத்திரவாதம் உள்ளது. வீடு, அலுவலகம், விரைவு சார்ஜிங் நிலையங்களை எம்.ஜி. மோட்டார்ஸ் ஏற்பாடு செய்கிறது என்று அதன் இந்திய பிரிவு தலைவர் ராஜீவ் சாபா தெரிவித்தார்.

இந்த அறிமுகம் குறித்து இந்நிறுனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் சாபாபேசுகையில்,”இசட்எஸ் இவி- மேம்படுத்தப்பட்டது. குறுகிய காலத்தில் அறிமுகப்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த உரிமையாளர் அனுபவத்தை வழங்க இந்தியாவில் வலுவான சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம் என்றார்.

எம்ஜி இசட்எஸ் இவி சொகுசு கார் எம்ஜி இ–ஷீல்டின் கீழ் உள்ளது, இதில் வாகன உற்பத்தியாளர் வரம்பற்ற கிலோ மீட்டர்களுக்கு 5 ஆண்டு உத்தரவாதத்தையும், பேட்டரி பேக் அமைப்பில் 8 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கி.மீ. உத்தரவாதத்தையும், 5 ஆண்டுகளுக்கு இருபத்து நான்கு மணிநேரமும் சாலையோர உதவி மற்றும் 5 தடவை கட்டணம் இல்லாத சேவைகள் ஆகியவற்றை அளிக்கின்றனர். எம்ஜி தனது வாடிக்கையாளர்களுக்கு 5-வழி சார்ஜிங் சூழல் அமைப்பை விரிவுப்படுத்துகிறது, இதில் குடியிருப்புகள்/அலுவலகங்களில் இலவசமாக பாஸ்ட் சார்ஜர், போர்ட்டபிள் சார்ஜிங், டீலர்ஷிப்களில் சூப்பர்பாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள், துணை நகரங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில் சார்ஜிங் நிலையங்கள் வசதியை அளிக்கிறது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *