சென்னை, பிப். 21
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சமூகவியல் மற்றும் கலை மேம்பாட்டு ஆய்வறிக்கையின் சார்பாக சிறப்பு சொற்பொழிவு, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி வரும் தமிழ்த் தாய் 73 தமிழாய்வு பெரு விழாவில் நடந்தது. மேலும் 3 எம்.ஜி.ஆர். நூல்களும் வெளியிடப்பட்டது.
புரட்சித் தலைவர் ஆட்சியில் சமூக முன்னேற்றம், பொன்மனச் செம்மலின் பொன்மொழிகள், புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சமூகத்தொண்டு ஆகிய 3 நூல்களை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் இயக்குனர் முனைவர் விஜயராகவன் வெளியிட்டார். ஆய்வறிக்கை பொறுப்பாளர் ம.செ. ரபி சிங் வரவேற்புரை ஆற்றினார். திருப்பத்தூர் பாரதி மாணவர் தமிழ் சங்கத்தின் நிறுவனர் தெய்வ சுமதி சிறப்புரை ஆற்றினார். முடிவில் ஆய்வு உதவியாளர் ஈ. விஜய் நன்றி கூறினார்.