ஜாம்நகர், மார்ச் 3–
‘என் வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது அல்ல’ என்று மகன் அனந்த் அம்பானியின் உருக்கமான பேச்சை கேட்டதும் முகேஷ் அம்பானி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் வரும் ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் 3 நாட்கள் நடைபெற்றது. அதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மணமகன் ஆனந்த் அம்பானி விருந்தினர்கள் முன் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், எனக்காக எனது குடும்பம் பல விஷயங்களைச் செய்துள்ளார்கள். என் வாழ்க்கையில் முட்களின் வலியை நானும் அனுபவித்து இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே பல உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்து உள்ளேன். ஆனால், என் அப்பாவும், அம்மாவும் ஒரு நாளும் என்னைக் கைவிட்டது இல்லை. நான் கஷ்டப்படும் போது எல்லாம் என்னுடன் இருந்தார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த விருந்தினர்களை முகேஷ் அம்பானி வரவேற்று உருக்கமான உரை ஆற்றினார்.