செய்திகள்

என்.டி.பி.சி. நிகர லாபம் ரூ.2840 கோடி

சென்னை, ஆக.12–

பொதுத் துறையைச் சேர்ந்த மின் தயாரிப்பு நிறுவனமான என்.டி.பி.சி. முதல் காலாண்டில் ரூ.2,840.28 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்ததாவது:–

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் என்.டி.பி.சி. நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.26,272.24 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.24,148.50 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம். நிகர லாபம் 5.63 சதவீதம் அதிகரித்து, ரூ.2,688.96 கோடியிலிருந்து ரூ.2,840.28 கோடியானது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்–ஜூன் காலாண்டில் என்.டி.பி.சி. குழுமத்தின் மொத்த மின் உற்பத்தி 76.63 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. கடந்த 2018–ல் இந்த உற்பத்தி 76.92 பில்லியன் யூனிட்டுகளாக காணப்பட்டது. மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் சராசரி மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.3.63-ஆக இருந்தது.

கடந்த நிதியாண்டில் ஜூன் 30 நிலவரப்படி 53,156 மெகாவாட்டாக இருந்த குழுமத்தின் மின் உற்பத்தி திறன் நடப்பாண்டில் 55,126 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்று என்.டி.பி.சி. தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *