செய்திகள்

‘‘என்னை கொலை செய்ய சதி நடக்கிறது:’’ மதுரை ஆதினம் பரபரப்பு பேச்சு

Makkal Kural Official

சென்னை, மே 3–

என்னை கொலை செய்ய சதி முயற்சி நடக்கிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர்தான் என்னைக் காப்பாற்றினார்” என்று சென்னையில் நடந்த அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் மதுரை ஆதினம் பேசினார்.

திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம், அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், எஸ்.ஆர்.எம்., பல்கலை தமிழ்ப்பேராயம் ஆகியவை இணைந்து நடத்தும், ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த 3 நாள் மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில் இன்று துவங்கியது. இந்த மாநாட்டில் இன்று மத்திய அமைச்சர் நட்டா, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். துவக்க விழாவுக்கு எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பாரிவேந்தர் தலைமை தாங்கினார். திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம், 27வது குரு மகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசி வழங்குகிறார்.

இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை நோக்கி மதுரை ஆதினம் வந்த நிலையில் உளுந்தூர் பேட்டை அருகே அவரது கார் விபத்தில் சிக்கியது.

மாநாட்டில், நேற்று விபத்தில் சிக்கி உயிர் தப்பியதை சுட்டிக்காட்டி, மதுரை ஆதினம் பேசுகையில், என்னை கொலை செய்ய சதி செய்து விட்டனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெருமான் தான் என்னை காப்பாற்றினார். இன்று இந்த இடத்திலே நிப்பேனா என்ற அளவுக்கு நேற்று ஆகி விட்டது. அவ்வளவு துாரம் நடந்து விட்டது. தருமை ஆதினம் ஆசி தான் என்னை காப்பற்றியது. நல்ல காரியத்தை பேச முடியவில்லை ஐயா என்று பேசினார்.

மாநாட்டில் நட்டா பேசியதாவது:

வாழ்க தமிழ், வளர்க தமிழகம். ஆன்மிகம் மட்டுமின்றி சமூக சேவையிலும் தருமபுரம் ஆதினம் ஈடுபட்டு வருவது பாராட்டத்தக்கது. மனிதாபிமானத்தை சைவ சித்தாந்தம் வலியுறுத்துகிறது.தேவாரம், திருவாசகம் தற்போதும் உணர்வுப்பூர்வமாக பாடப்படுகிறது. பாரம்பரிய சைவ சித்தாந்தம் பின்பற்றும் சைவ ஆதினம் பற்றி நான் அறிவேன். சைவ சித்தாந்தத்திற்கு தமிழகம் சிறந்த மண். இவ்வாறு அவர் பேசினார்.

”சைவ சித்தாந்தம் தமிழுக்கு அடையாளம். சைவ சித்தாந்தத்தில் சமுதாய வேறுபாடு கிடையாது. சனாதன தர்மமே ஆன்மிகத்தின் அடையாளம். அனைவரும் ஒன்று என சனாதனம் கூறுகிறது.

பக்தி நிலையிலேயே சிவனை அடைய முடியும். பக்தி தான் ஆன்மிகத்தை காப்பாற்றுகிறது” என மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில் தெரிவித்தார்.

மதுரை ஆதினம் பரப்பரப்பு பேச்சு

––––––––––––––––––––––

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *