செய்திகள்

‘‘என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே கடவுள் தான்’’: பிரதமர் மோடி

புதுடெல்லி, மே 22–

”நான் பயாலஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை, என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்” என பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு கூறினார்.

‘‘என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்து பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன்’’ என்றார்.

ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என்பதை அழுத்தந்திருத்தமாக அவர் கூறினார்.

மதச்சார்பின்மை பற்றிய ஒரு கேள்விக்கு மோடி பதலளித்தார். மதச்சார்பின்மையோடு நாங்கள் இருந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மதச்சார்பில் இருப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள். அவர்கள் தான் பிரிவினைவாதிகளாக இருக்கிறார்கள். மதவெறியர்களாக இருக்கிறார்கள் என்றார்.

மத்திய அரங்சாங்கத்தின் கொள்கை – கோட்பாடு – மற்றும் நலத்திட்டங்களில் ஆர்வமும் அக்கறையும் – ஆர்வமும் காட்டி வரும் பாபர் மசூதி வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் இக்பால் அன்சாரி பற்றிய ஒரு கேள்விக்கு மோடி பதிலளித்தார்.

‘பாபர் மசூதி வழக்கில் வாழ்நாள் முழுதும் போராடியவர் இக்பால் அன்சாரி என்றாலும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டவர். ராமர் கோவில் நிகழ்ச்சியில் (பிரான் பிரதிஷ்டை) பங்கேற்றவர் என்று பாராட்டினார்.

ஸ்ரீராமர் கோவில் விழாவுக்கு நாங்கள் காங்கிரசுக்கு அனுப்பினோம். ஆனால் காங்கிரஸ் புறக்கணித்து விட்டது.

சுதந்திரம் அடைந்த உடனேயே ராமர் கோவில் கட்டியிருக்கப்பட வேண்டும். ஆனால் அது நடக்கவேயில்லை அதற்குக் காரணம் காங்கிரஸ் தான். ராமர் கோவிலைக் கட்டினால் அது எங்கே தனது ஓட்டு வங்கியை பாதித்து விடுமோ என்கிற பயம் தான். ராமர் கோவிலை கட்டும் உத்தேசத்தை தடுத்து நிறுத்த பல விதங்களிலும் முயற்சிகள் கோர்ட்டில் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் அவை எதுவுமே பலிக்கவில்லை என்று பதிலளித்தார் மோடி.

#NarendraModi #RamMandir #Ayodhya

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *