செய்திகள்

என்டிடிவி நிறுவனத்தின் 29 சதவீத பங்குகள்: அதானி நிறுவனம் வங்கியது

மும்பை, ஆக. 24–

பிரபல ஆங்கில தொலைக்காட்சியான என்டிடிவி சேனலின் 29 சதவீத பங்குகளை கவுதம் அதானி நிறுவனம் வாங்கியுள்ளது.

தேசிய அளவில் பிரபல செய்தி தொலைக்காட்சியான, என்.டி.டி.வி. எனப்படும், ‘நியூ டெல்லி டெலிவிஷன்’ நிறுவனத்துக்கு மூன்று செய்தி சேனல்கள் உள்ளன. மூத்த பத்திரிகையாளர் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் இணைந்து இந்த நிறுவனத்தை துவங்கினர்.

29 சதவீத பங்கை வாங்கிய அதானி

இந்த நிறுவனத்தின் 29.18 சதவீதப் பங்குகளை அதானி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏ.எம்.ஜி. மீடியா நெட்வொர்க்ஸ் வாங்கியதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. ‘ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தின் பங்குகளில் 25 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை வாங்கிவிட்டால், மேற்கொண்டு வாங்கப்போகும் பங்குகள் குறித்த வெளிப்படையான அறிவிப்பை வெளியிடலாம்’ என செபியின் விதிமுறைகள் உள்ளன.

அதன்படி, என்.டி.டி.வி. நிறுவனத்தின் மேலும் 26 சதவீதப் பங்குகளையும் வாங்கப்போவதாக அதானி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *