செய்திகள்

என்ஜினீயரிங் படிப்பில் சேர 70 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சென்னை, ஜூன்.25-–

என்ஜினீயரிங் படிப்பில் சேர 5 நாளில் 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற இளங்கலை என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 2022-–23-ம் கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் 69 ஆயிரத்து 720 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இவர்களில் 33 ஆயிரத்து 429 பேர் கட்டணம் செலுத்திவிட்டனர். 13 ஆயிரத்து 314 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.

மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 காலி இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜூலை 19-ந் தேதி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.