செய்திகள்

ஏப்ரல் 7- உலக சுகாதார தினம்; எனது உடல்நலம், எனது உரிமை

Makkal Kural Official

சிறப்புக் கட்டுரை


தாய்-சேய் ஆரோக்கியம், குடும்பங்களின் வளமான எதிர்காலத்திற்கான அடித்தளமாக உள்ளது. இன்று ஏப்ரல் 7ல் கொண்டாடப்படும் உலக சுகாதார தினம், ஆரோக்கியமான தொடக்கங்கள், நம்பிக்கையான எதிர்காலங்கள் என்ற தலைப்பில், ஒரு வருட கால விழிப்புணர்வு முயற்சியை தொடங்க உள்ளது. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், தாய்மார்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம், ஆரோகியமான வாழ்க்கையை உறுதிப்படுத்திவிடலாம்.

மகப்பேறு மற்றும் பிறப்புக்கு பிந்தைய ஆரோக்கியம்:

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அதன் கூட்டமைப்புகள், பிரசவ மரணங்களை அறவே தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை வலுப்படுத்த செயல்பட்டு வருகின்றன.

மகப்பேறு காலத்திலும், பிரசவத்திற்குப் பிறகும் பெண்கள் சந்திக்கும் உடல்நலப் பிரச்சனைகள் நீண்ட காலத்திற்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும், ஆகவே, இதை சாதாரணமாக விட்டுவிடக் கூடாது.

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கான வழிமுறைகள்:

* சரியான ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளுதல்.

* மருத்துவப் பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ளுதல்.

*மனநலத்தை உறுதி செய்வதற்கான கவனம்.

* குழந்தையின் வளர்ச்சியை கண்காணித்து, உரிய ஆலோசனைகளைப் பெறுதல்.

பிரசவத்தின் போதும், குழந்தை பிறந்த பின்னரும், பெண்கள் நலமுடன் இருக்கின்றனரா? என்பது கேள்விக்குறி தான். வறுமையை எதிர்கொண்டுள்ள பல பின் தங்கிய கிராமபுற பகுதிகளில் இந்த நிலை மிகப்பெரிய சவாலாகவே இருப்பதை மறந்து விடக்கூடாது.

நாம் இயற்கையாகவே பெறவேண்டிய சுத்தமான காற்று, நல்ல ஊட்டச்சத்து, தரமான வீடுகள், வேலை – சுற்றுச்சூழல் நிலைமைகள், பாகுபாட்டிலிருந்து சுதந்திரம். உலகெங்கிலும் வாழும் மில்லியன்கணக்கான மக்களை ஆரோக்கியத்திற்கான உரிமை பெருகிய நிலையில் பெரும் அச்சுறுத்தலுக்கு உலகமே உள்ளாகி வருகிறது என்பதை நாம் அறிவோம்.

நோய்கள், வெள்ளம் – புயல் போன்ற இயற்கைப் பேரழிவுகள், அவற்றைத் தொடர்ந்த மரணம், இயலாமைக்கான காரணங்கள். இவை தவிர இயற்கை நோய்கள் மனிதனுக்கு மிகவும் தீங்கு மற்றும் கவலையை ஏற்படுத்தும் ஆபத்துக்கள் ஒருபுறம் இருக்க, புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது போன்றவை காலநிலை நெருக்கடியை உந்தித் தள்ளுவதால் சுத்தமான காற்றை சுவாசிக்கும் நமது உரிமையைப் பறிக்கிறது என்பதையும் நாம் உணர வேண்டும்.

உட்புற மற்றும் வெளிப்புற காற்று மாசுபாடு ஒவ்வொரு 5 வினாடிக்கும் ஒரு உயிரைப் பறிக்கிறது என்கிற அறிக்கை கவலை தரும் விஷயம். நோயற்ற உலகத்திற்கான நமது நாளைய கனவுக்கு எவ்வாறு நாமே பங்களிக்க முடியும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக கை கழுவுதலின் முக்கியத்துவம் என்ற தலைப்பு, மருத்துவரை அணுகும்போது அவரது கிளினிக்கில் கூட கை கழுவுவது எப்படி? என்கிற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.

இப்போது தெரிந்து கொள்வோம் கை கழுவுவதன் முக்கியத்துவத்தை. கோவிட் 19 தொற்று காட்டுத்தீயாக உலகெங்கும் பரவிய காலத்தில் உயிர் இழப்பு ஏற்படும் என்ற பெரும் அச்சத்தில் கை கழுவுதல் போன்றவை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும் கை கழுவுதல் என்பது ஒரு பிறவி பழக்கமாக இருக்க வேண்டும். அது எந்த நேரத்திலும் நம்மால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அசுத்தமான கைகளால் பல தொற்று நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடும் என்பதால் கை கழுவுதல் அத்தகைய தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முதல் படியாக உதவுகிறது. இந்த நோய்களில் சால்மோனெல்லோசிஸ் போன்ற இரைப்பை குடல் நோய்த்தொற்றுகள், சளி மற்றும் கொரோனா வைரஸ் (COVID-19) போன்ற சுவாச தொற்றுகள் அடங்கும்.

வீட்டில் உள்ள முதியவர்களும் குழந்தைகளும் இதுபோன்ற நோய்த்தொற்றுகளாலும் அது தொடர்பான சிக்கல்களாலும் அவதிப்படும்போது, அமைதியாகப் பார்வையாளர்களைப் போல் யார்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்? சோப்பு கலந்த தண்ணீருடன் கைகளை முறையாக கழுவுவதன் மூலம் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம். பார் மற்றும் திரவ சோப்பு இரண்டும் கிருமிகளை அகற்ற நன்றாக வேலை செய்கிறது.

சுருக்கமாகச் சொன்னால், நாம் யாராக இருந்தாலும் சரி, நம்மைச் சுற்றி ஆரோக்கியத்தின் மிக உயர்ந்த தரத்தை அடைய நமக்கு முழு உரிமை உள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) சமீபத்தில் மருத்துவச் செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 மில்லியன் மக்களைக் கடுமையான வறுமையில் தள்ளுகின்றன என சுட்டிக்காட்டி இருக்கிறது.

கைகழுவுவது நமது உடல்நலம் ;நமது உரிமை என்பதை அறிவோம். எந்த இடத்தில் இருந்தாலும் தண்ணீரால் கை கழுவிவிட்டு உணவருந்துவோம், நம்மையும் நம் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்போம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *