செய்திகள்

எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி: விஜயகாந்த் வீடியோ வெளியிட்டார்

சென்னை, ஏப்.15–

எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தொடர் சிகிச்சை காரணமாக ஓய்வில் இருந்து வந்தார். சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:

”பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, அன்புகொண்ட சகோதர சகோதரிகளே, என் உயிரினும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே! அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்காகப் பிரார்த்தனை செய்துகொண்ட அனைவருக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள். நமது சின்னம் முரசு. நாம் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மொத்தம் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்யுமாறு இரு கரம் கூப்பி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *