செய்திகள்

எத்திராஜ் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா: 2405 இள, முது நிலை மாணவிகளுக்கு பட்டம்

சென்னை, பிப். 12–

2 நாட்கள் நடைபெற்ற, எத்திராஜ் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், மொத்தம் 2405 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

எத்திராஜ் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, இரண்டு நாட்களாக பிப்ரவரி 9, 10, ந்தேதிகளில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாக்களில், கல்லூரி முதல்வர் கோதை வரவேற்புரை ஆற்றினார். கல்லூரித் தலைவர் சந்திராதேவி தணிகாச்சலம் தலைமை தாங்கினார்.

முதல்நாள் நிகழ்ச்சிக்கு, பிரமோஸ் ஏவுகணையின் தந்தையும், விஞ்ஞானியுமான சிவதாணுப்பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அறிவியல் துறையில் படித்த, இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.

2405 பேருக்கு பட்டம்

இரண்டாம் நாளாக 10 ந்தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் தேவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கலைப்பிரிவில் படித்த இளநிலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இரண்டு நாட்களிலும் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், 1970 மாணவிகள் இளநிலைப் பட்டமும், 369 மாணவிகள் முதுநிலை பட்டமும், 66 பேர் எம்.பில் பட்டமும் என, மொத்தம் 2405 மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.

இந்த விழாக்களில், தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் மாயா, போர்டு உறுப்பினர்கள் டாக்டர் இ.முருகன் மற்றும் டாக்டர் சேகர் உள்ளிட்டோருடன், நிதி அறங்காவலர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *