சினிமா செய்திகள்

‘எது கடவுள்?’’ யுவன் சங்கர் ராஜா விளக்கம்

சென்னை, மார்ச்.2–

‘‘அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவின் அரவிந்தன் சினிமாவில் அறிமுகமானேன். தமிழ் சினிமாவில் இந்த 25 வருடம் எப்படி போனது என்பதே தெரியவில்லை. முதல் முறை நான் மியூசிக் செய்த போது இப்போது மாதிரி சோஷியல் மீடியா இல்லை. பாடல் ஹிட்டாகிறதா என்றே தெரியாது. யாராவது வந்து சொன்னால் தான் தெரியும்’’ என்று அனுபவம் பேசினார் யுவன் சங்கர் ராஜா.

‘‘எது கடவுள்?’’ என்பதற்கும் அவர் விளக்கம் அளித்தார்.

தமிழ் சினிமாவில் கணக்கிலடங்கா வெற்றிப்பாடல்களை தந்த யுவன் சங்கர் ராஜா 25 ஆண்டுகளை கடந்ததையொட்டி, பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘‘நான் அதிகம் கேட்பது எப்போதும் அப்பா பாடல்கள் தான், வீட்டில் அவர் பாடல்கள் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கும் போது என் மனைவி கூட திட்டுவார், ‘போதும்பா’ என்பார். ஆனால் எனக்கு அவர் பாடல்கள் தான் பிடிக்கும் என்று தெரிவித்தார்.

படத்தை விட ஃபேமிலி தான் சந்தோஷம் தரும். அவர்களுடன் இருப்பதை தான் நான் அதிகம் விரும்புவேன். 25 வருடங்கள் கடந்ததாக தெரியவில்லை, இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.

இறைவன் தேடல் ஏன்?

‘‘என் அம்மாவோட இழப்பு தான் இறைவன் பற்றிய தேடல் அதிகமாக காரணம். நானா இப்படி இசையமைக்கிறேன் என தேடும்போது ஒரு புள்ளியில் போய் நிற்கும் அல்லவா, அது தான் கடவுள் என நினைக்கிறேன் என்றார்.

என் தயாரிப்பில் திரைக்கதை எழுதி வைத்திருக்கிறேன் அடுத்த வருடத்தில் நானே இயக்க போகிறேன். ரஜினி சார் படத்திற்கு நான் ரெடி. நிறைய சுயாதீன ஆல்பங்கள் செய்ய வேண்டும் நிறைய புது முயற்சிகள் செய்ய வேண்டும். இந்த பயணம் நல்லபடியாக தொடரும் என நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி என்றார்.

என்னுடன் இருக்கும் டீம் மிக நல்ல டீம், ராம்ஜி, கௌசிக், குரு எல்லோருக்கும் நன்றி. பிரபல இசையமைப்பாளர் நா.முத்துக்குமாருக்கு நான் கொடுத்த இடம் வேறு, அதை யாருக்கும் என்னால் தர முடியாது, அவர் மிகச்சிறந்த பாடலாசிரியர். அவருடன் நிறைய பாடல்களில் நிறைய வேலை பார்த்திருக்கிறேன். இப்போது விவேக், பா விஜய் என நிறைய பேருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன் என்னுடன் பயணித்த பாடலாசிரியர் அனைவருக்கும் நன்றி என்றார்.

Leave a Reply

Your email address will not be published.