சிறுகதை

எதிர்ப்பதம்..! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

கோபால் எங்க இருக்கீங்க? என்று வீரமணி கேட்க

“சார் நான் வெளியே இருக்கேன் இன்னும் நான் அங்க வர்ரதுக்கு ஒரு மணி நேரம் ஆகும். அதுக்கு பின்னாடி நீங்க வந்தீங்கன்னா நாம சந்திக்கலாம்”

என்று கோபால் சொல்ல

ஓகே கோபால் நான் ஒரு மணி நேரம் கழிச்சு வந்துடறேன் “என்று சொன்ன வீரமணி ஒரு மணி நேரத்திற்கு கோபாலை தொந்தரவு செய்யவில்லை .ஒரு மணி நேரத்திற்கு பின் மறுபடியும் போன் செய்தான் வீரமணி

“கோபால் எங்க இருக்கீங்க?

“சார் இன்னும் நான் வரல. வெளியே தான் இருக்கேன். கண்டிப்பா இப்ப வந்திருவேன். நாம மீட் பண்ணலாம் “

என்றான் கோபால்

“இல்ல கோபால் அந்த ஒர்க்க வேகமா முடிச்சா நல்லது. அது பெண்டிங்ல இருக்கு. தள்ளிக்கிட்டே போனா நல்லா இருக்காது. சீக்கிரம் முடிச்சிடலாம்”

என்று வீரமணி சொல்ல

” கண்டிப்பாக முடிச்சிடலாம்”

என்று அரைகுறையாகப் பதில் சொன்னான் கோபால்.

” இவன்கிட்ட இந்த ஒர்க்கு குடுத்துட்டு நாம படுற பாடு பெரும்பாடா இருக்கே. இவன என்ன பண்ணலாம்” என்று வருத்தப்பட்டு கொண்டே இருந்தான் வீரமணி

” சரி நாம வீட்ல இருக்குறதுக்கு கோபால் ஆபீஸ்க்கு போலாம் .அங்க போயி இருந்தோம்னா அவனை கையோட பிடிச்சு அந்த வேலைய முடிச்சிடலாம்”

என்று கங்கணம் கட்டிக்கொண்டு கோபால் அலுவலகத்திற்கு விரைந்தான் வீரமணி .

செல்லும் வழி எல்லாம் அவனைப் பற்றிய சிந்தனைகள் தான். எப்பவும் எந்த வேலை கொடுத்தாலும் சரியா அவன் செய்றதில்லை. சாக்குபோக்கு வேற சொல்றான். இதைவிட அவனுடைய ஆபீஸ்ல சாமி பக்தி பாடல் வேற ஓடுது. இவன எந்த வகையில சேக்கிறது”

என்று வருத்தப்பட்டு கொண்டு சென்றான் வீரமணி. ஒரு வழியாக அவனுடைய அலுவலகத்தை அடைந்தபோது, அவனுடைய அலுவலக கதவுத் தாழ்ப்பாள் போடாமல் இருந்தது.

” என்ன இது? தாப்பாழ் போடாம இருக்கிறான். எவ்வளவு விலை உயர்ந்த பொருள்கள் எல்லாம் அவனுடைய ஆஃபீஸ்க்குள்ள இருக்கு முட்டாப் பய. வாய் தான் பேசுறானே ஒழிய நல்ல அறிவு இல்ல”

என்று நினைத்த வீரமணி, கோபால் அலுவலகத்தை இழுத்து பூட்டித் தாழ்ப்பாள் போட்டு விட்டு வெளியே வந்தான் வீரமணி. அவன் அந்த இடத்தை விட்டு கடந்து வருவதற்குள்ளாக அவனின் செல்போன் அலறியது.

” சார் எங்க இருக்கீங்க.

“நான் வெளியே இருக்கேன். கோபால் சொல்லுங்க. நீங்க தான் உங்க ஆபீஸ்க்கு வர லேட் ஆகும்னு சொன்னீங்க. இங்க வந்து பாத்தா நீங்க பேசாம ஆபீஸ திறந்து போட்டுட்டு போயிருக்கீங்க. அதான் நான் வீட்டப் பூட்டித் தாப்பாழ் போட்டு வந்துட்டேன். உங்களுக்கு பொறுப்பு இல்ல காேபால் உங்க மேல வச்சிருக்கற அக்கறையில தான் கோபால் வீட்ட வெளியில பூட்டிட்டு வந்திட்டேன்”

என்று கருணையாகச் சொன்னான் வீரமணி

” சார் என்னைய மன்னிச்சிடுங்க. தப்பு என்னோடது தான். காலையிலிருந்து நான் ஆபீஸ விட்டு வெளியில எல்லாம் போகல உங்ககிட்ட சும்மா பொய் சொன்னேன் . நீங்க மேல வந்து கதவை திறந்து விடுங்க .நான் ஆபீஸ்க்குள்ள தான் இருக்கேன்” என்று அலறியடித்துச் சொன்னான் கோபால் .

“பாத்திங்களா நீங்க பண்ண தப்பு உங்களையவே சுத்திருச்சு. எப்பவும் உண்மையைப் பேசி பழகுங்க கோபால். நீங்க என்கிட்ட தப்புக்கு மேல தப்பா பண்ணிட்டு இருந்திங்க. ஆனா பாருங்க அந்த தப்பே உங்கள காட்டிக் குடுத்திருச்சு. ” என்று சொன்ன வீரமணி வெளிப்பக்கமாக அடைக்கப்பட்டிருந்த கதவைத் திறந்தான்.

” வீரமணி சார், இனிமேல் இந்த மாதிரி தப்ப நான் பண்ண மாட்டேன். என்னை மன்னிச்சிடுங்க” என்று வீரமணியைக் கட்டிப்பிடித்தான் கோபால்.

இப்போதெல்லாம் காேபால் பொய் சொல்வதே இல்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *