சிறுகதை

எதிர்பாராத நேரத்தில் -ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு பை , தண்ணீர் பாட்டில் சகிதம் எடுத்துச் சென்றான் சிதம்பரநாதன். கொளுத்தும் வெயில் கொடுமையில் இருந்து விடுபட,

“தண்ணில ஈரச் சாக்க கூட முக்கி எடுத்துட்டு போகணும் போல . அவ்வளவு வெயில் அடிக்குது. சூரியன் உடைஞ்சு பூமிக்கு வந்திருச்சாே என்னமோ அவ்வளவு வெப்பம் ?” என்று சிதம்பரநாதன் சொன்னதைக் கேட்டு சண்முகம் ஆமாம் என்று தலையசைத்தான்.

சிதம்பரம் எப்பவுமே தண்ணி பையெல்லாம் கொண்டு வர மாட்ட. இன்னைக்கு புதுசா இருக்கு. அதுவும் தண்ணி பாட்டில் வேற வித்தியாசமா இருக்கே?”

என்று சண்முகம் கேட்டதற்கு

” என்னங்க தண்ணியில்லாம உள்நாக்கெல்லாம் வரண்டு , வவுத்துக்குள்ளே தீ புடிச்சிரும் போல. அந்த அளவுக்கு வெயில் இருக்கு. வெப்பம் இருக்கு. தாங்க முடியல . அதனால தான் இனிமே தினமும் பை, தண்ணி காெண்டு வர முடிவு பண்ணிட்டேன் என்றான் சிதம்பரம்.

அவர்கள் அலுவல வேலை விஷயமாய் போன இடமெல்லாம் தண்ணீரை நிரப்பி நிரப்பி எப்போது தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் மட்டும் அல்ல. உடன் இருந்தவர்களுக்கும் தண்ணீரை கொடுத்தனர்.

சிதம்பரநாதன் ஐயா ரொம்ப நன்றி என்று தண்ணீர் குடித்தவர்கள் சிதம்பரநாதனை வாழ்த்திச் சென்றார்கள்..

அன்று அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்லத் தயாராக இருந்தான் சிதம்பரநாதன்.

சிதம்பரநாதன் சண்முகம் இருவரும் ஒரே வழித்தடம் என்பதால் இருவரும் ஒரே பேருந்தில் போவது தான் வழக்கம். அப்படி இருவரும் கிளம்பும்போது தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிரப்ப போனான் சிதம்பரம்.

வீட்டுக்கு தானே போறே? அப்புறம் எதுக்கு தண்ணி? இருவது நிமிஷத்துல வீட்டுக்கு போய் தண்ணி குடிச்சுக்கலாமே? எதுக்கு சிதம்பரநாதன் தண்ணீ நெரப்பிட்டு ” என்று சண்முகம் கேட்டதற்கு,

” அப்படி இல்லை சண்முகம். தண்ணி தேவை எப்ப யாருக்கு வரும்னு தெரியாது? நம்ம கொண்டு போறதக் கொண்டு போவோம். தண்ணி சாப்பிடுவதும் சாப்பிடாததும் நம்ம விருப்பம். தண்ணி குடிச்சா தீரும் .இல்லையா அப்படியே இருக்கும். வீட்டுக்கு எடுத்துட்டு போக வேண்டியதுதான். இது ஒன்னும் கெட்டுப் போற பொருள் இல்லையே? என்று சிதம்பரம் சண்முகத்திடம் சொன்னான்.

இருவரும் பேருந்து ஏறினார்கள்.இருவரும் அமர்வதற்கு இடம் இல்லை என்பதால் நின்று கொண்டே பயணப்பட்டார்கள். காலையிலிருந்து அலுவலக முடியும் வரை நடந்த எல்லா நிகழ்வுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து பேசி நடந்து வந்தார்கள்.

அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சிறுமி கீழே சாய்ந்தாள். அருகில் இருந்த அந்தச் சிறுமியின் தாயார் அவளைத் தொட்டுத் தூக்கி கன்னத்தைத் தடவி

அம்மா என்ன ஆச்சு? என்னாச்சு 2 என்று கேட்க, அந்தச் சிறுமியின் தலை வாழைக்குலையாகக் கீழே கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்களிடம் தண்ணீர் என்று கேட்டாள், அந்தத் தாயார்

தண்ணீர் இல்லை என்று உடன் வந்தவர்களும் சொல்ல தண்ணீர் இல்லை என்று கைவிரிக்கவும் சட்டென்று எதையும் எதிர்பார்க்காத சிதம்பரநாதன் தன் கையில் இருந்த தண்ணீரை எடுத்து அப்படியே கொடுத்தான்.

ரொம்ப நன்றி என்று வாங்கிய அந்தப் பெண்மணி மயங்கி விழுந்த அந்தக் குழந்தையின் முகத்தில் சல் என்ற அடிக்க, எதையோ பார்த்துப் பயந்த அவசரத்தில் கண்விழித்தாள் அந்தச் சிறுமி

“தண்ணி குடி ” என்று அந்தப் பாட்டிலில் இருந்த தண்ணீர் குடிக்க மடக் மடக்கு என்று குடித்தது. குழந்தை

எனக்கு என்னமோ மாதிரி வந்துருச்சுமா என்று குழந்தை பரிதாபமாகச் சொல்ல

“வெயிலுங்க கடுமையான வெயில் 110 டிகிரி அடிக்குது .நம்மள மாதிரி மனுஷங்க பெரியவங்களே தாங்க முடியல .சின்னக் குழந்தை எப்படி தாங்கும் ? அதுதான் மயக்கம் போட்டு கீழ விழுந்துருச்சு போல ? என்று சொல்ல

ஐயா தக்க சமயத்தில் தண்ணீர் கொடுத்து உதவுனதுக்கு ரொம்ப நன்றி ” என்று சிறுமியின் தாயார் சிதம்பர நாதனை கையெடுத்து கும்பிட்டாள்.

அம்மா தப்பு. இந்த சமயத்துல எங்களுக்கு உங்க மூலமா தண்ணீர் கொடுத்ததற்கான இந்த வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கும் உங்களுக்கும் நான் நன்றி சொல்லணும்ங்க. அப்படி எல்லாம் இல்லை என்று சொல்ல ” இதற்கு சற்று நேரத்திற்கு முன்னால் வீட்டிற்கு தானே போகிறோம்? தண்ணீர் எதற்கு வேண்டாம் ? என்று சொல்லிய சண்முகம் சிதம்பர நாதனை ஏற இறங்க பார்த்தான்.

அவரின் பார்வையில் ஆயிரம் அர்த்தம் இருந்தது. எதுவும் பேசாமல் சிதம்பர நாதனை கையெடுத்து கும்பிட்டான் சண்முகம். அதெல்லாம் ஒன்னும் இல்ல .சண்முகம் நம்ம கிட்ட இருக்குற விஷயம் எப்போ யாருக்கு தேவைப்படுமோ தெரியாது. நாம எப்பவும் நமக்கு வேணும் அப்படிங்கறது மட்டும் வெச்சு, மத்தவங்களுக்கு வேணும் அப்படிங்கறதை வைத்துக்கொண்டா நம்ம தான் மனுஷன் “

என்று சிதம்பரநாதன் குழந்தையை மயங்கி விழுந்த அந்தக் குழந்தை இப்போது தன் தாயிடம் சிரித்துப் பேசிக் கொண்டு வந்தது .

அதை பார்த்த சிதம்பரநாதனுக்கு மனசெல்லாம் மத்தாப்பூ கூட்டம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *