அன்று அந்தப் பெண்கள் கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா. திறந்து வைப்பவர் பிரபல நடிகை தீபாஸ்ரீ அந்த முன்னணி நடிகை வருகையால் கல்லூரியே கூட்டத்தில் தத்தளித்தது. வந்தவர்களில் ஒரு பாட்டி நடிகையிடம் சேர்க்கும் படி அவருடைய செகரட்டிரியிடம் ஒரு கடிதம் கொடுத்தாள். அந்த கடிதமும் தீபஸ்ரீயிடம் கொடுக்கப்பட்டது.
ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடந்தேறியது. ஒவ்வொரு கடிதமாக சில இடைவேளியின்போது நடிகை படித்தாள். கடிதங்கள் என்ன என்றால் அவளின் நடிப்பைப் புகழ்ந்துதான். தன் தாயார் ஜெயலெட்சுமி அம்மாள் என்று கையெழுத்திட்ட அந்தத் தபாலை கண்டு திடுக்கிட்டாள். வேகமாகவும் அதைப் படித்தாள். நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.
அவர் ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் திருமணமாகி வந்தாள். வந்தவுடன் கருவுற்றாள். கொஞ்ச மாதத்திலேயே ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. பிரதீபா எனவும் பெயரிட்டார்கள். வீட்டில் பற்றாக்குறையே தாண்டவமாடியது.
அப்போது ஒரு அதிசய திருப்பம் நடைபெற்றது. பக்கத்தில் இருந்த பார்க்கில் ஒரு சினிமா சூட்டிங் நடிந்து கொண்டிருந்தது. தற்செயலாக தீபாவும் பார்க்கச் சென்றாள். கூட்டத்தை சூட்டிங் செய்யும் போது தீபாவும் அதில் நின்றுகொண்டிருந்தாள். கேமராவில் பார்த்த டைரக்டர் இந்தப் பெண் கவர்ச்சி கண்களுடன் நல்ல புகைப்படத்தோற்றத்தில் தெரிகிறாளே என வியந்தார். மேலும் அவளைப் பற்றியும் விசாரித்தார்.
சில நாட்களில் அவளுடைய வீடு தேடி அந்த டைரக்டர் வந்தார்.
தீபாவிடம் கேட்டார் ‘‘ஒரு சிறிய ரோல் என் படத்தில் இருக்கிறது. நீ நடிக்கின்றாயா?’’ என்று வினவினார். அவள் கணவனைப் பார்த்தாள்.
‘‘சரி சொல்’’ என்றான்.
ஆனால் இந்த ஒரு பாத்திரம் மட்டுமே நடிக்க வேண்டும் என்றாள்.
படம் எடுத்து முடித்து விட்டார்கள். அவர் பிரபல டைரக்டர் விஸ்வநாதன் . அந்தப்படம் வெற்றிப் படமாக மாறியது. அவளின் ரோலும் பேசப்பட்டதுடன் யார் இந்த நடிகை எனவும் வினவும்படி ஆனது.
அடுத்தடுத்து சிறிய ரோல்கள் வந்தாலும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது.
அவளின் நடிப்புத் திறமையும் அழகும் அதற்கு ஏற்றபடி இருந்தது. பெயரும் தீபஸ்ரீ என்று மாற்றிக் கொண்டாள். அவள் மேலும் மேலும் உச்சத்தை் தொட்டாள். கணவன் மோகன ரங்கன் இந்த நிலை நீடித்தால் குழந்தையை நல்ல முறையில் வளர்க்க முடியாது என்று நினைத்தான். அவனுடைய சொந்த ஊரான தெற்கு மூலையில் உள்ள அல்லிக் குப்பம் என்ற ஊருக்கு அழைத்துச் சென்று விட்டான்.
உதவிக்கு தீபாவின் அம்மா ஜெயலெட்சுமியையும் கூட்டிச் சென்றான். திரை வெளிச்சமே படாமல் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தான். தீபஸ்ரீ அவ்வப்போது தன் அம்மா பெயருக்கு பெரியத் தொகையாக பேங்கில் போடுவாள். ஆனால் அந்தப் பணத்தை யாரும் தொடுவதேயில்லை. அந்த கிராமத்திலேயே வளர்ந்து வந்தாள் பிரதீபா. அந்த சிறுமியைப் பார்த்தவர்கள். இவள் நடிகை தீபாஸ்ரீ போல் இருக்கிறாளே என்று சொல்லுவார்கள்.
காலம் ஓடியது. பிரதீபா சென்னையில் ஒரு கல்லூரியில் தன் படிப்பைத் தொடர்ந்தாள். அங்கே அவளைப் பார்த்தவர்கள் அவளிடமே நீ நடிகை தீபஸ்ரீயைப் போல் இருக்கிறாயே என்பார்கள்.
தீபாவும் தன் வயது ஏறினாலும் அதற்கேற்ப முகசீர்த்திருத்தங்கள் செய்து கொள்வாள். ஆனாலும் தன் குழந்தையை பெரிதாக நினைக்கவில்லை. அவளுடைய திரை உலக வாழ்க்கையே அவளுக்கு பிரதானமாக இருந்தது. பணமும் புகழும் அவளிடம் மண்டிக்கிடந்தது.
அப்போதுதான் தன் தாயின் கடிதம் அவருக்குக் கிடைத்தது. அவருக்கு தாய்மை உணர்வு பொங்கியது.
பிரதீபா முதலிடம் என்று சொன்னால் அவளை தன்னுடன் அணைத்தவாறு பரிசைக் கொடுப்பாள். தீபா கண்களுக்கு பிரதீபா ஒரு தேவதையாகத் தோன்றினாள்.
அவளுடைய செக்ரட்ரியிடம் சொல்லி அவளைத் தன் இருப்பிடம் வரச் செய்தாள். செக்ரட்டரி சந்துரு நல்லவன்தான். ஆனாலும் பணம் மட்டும் கொஞ்சம் சுருட்டிவிடுவான். ஆனால் எல்லா பட வாய்ப்புகளும் அவனால்தான் வந்து குவிந்தன. அவன் புரிந்து கொண்டான். இந்த பிரதீபா தான் தீபஸ்ரீயின் மகள் என்று தான்தான் அவளின் அம்மா என்றும் சொன்னாள்.
பாட்டியும் ஒத்துக் கொண்டாள்.
தீபா மிகவும் ஆசையுடனும் அன்புடனும் கொஞ்சி மகிழ்ந்தாள். இனி நீ இங்கேதான் தங்க வேண்டும். நீ என்னுடைய தேவதை என்றாள். மகிழ்ச்சியுடன் தாயின் அரவணைப்பில் மகிழ்ந்தாள்.
ஒருநாள் தாயன்பு பிரதீபாவுக்கு திகட்ட ஆரம்பித்தது. எவ்வளவு நாள் தான் பாதாம் அல்வாவையே சாப்பிடுவது நகைகளும் அழகிய உடைகளும் பிரதீபாவுக்கு அலுக்க ஆரம்பித்து விட்டது.
கல்லூரிக்குச் சென்றால் தீபாவின் மகள் என்ற நினைப்புதான் எல்லோருக்கும் வந்தது. ஒரு தடவை பாட்டி வீட்டிற்கு சென்று வருகிறேன் என்றாள் பிரதீபா.
சரி என்றாள் தீபஸ்ரீ, பஸ்ஸில் போக நினைத்த பிரதீபாவை தீபா மறுத்து விட்டு தன்னுடைய விலை உயர்ந்த காரிலேயே செல்லும்படி வலியுறுத்தினாள்.
அல்லிக் குப்பத்திலும் அதே நிலைதான். பாட்டி என்று ஆசையுடன் அணைத்துக் கொண்டாள்.
என்னதான் செய்வது என்று இருதலைக் கொள்ளி எறும்பு போலானாள். அவள் பழகிய இடமான ஊருக்கு வெளியேயிருந்த ஊருணிப்பக்கம் சென்றாள். அங்கே ஒரு பட சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. டைரக்டர் வேகமாக வந்தார் பிரதீபாவை நோக்கி நாளை சூட்டிங்கிற்காக வந்துள்ளீர்களா மிஸ் பிரதீபா என்றார்.
அவளுடைய வாயிலிருந்து ஆம் என்ற இரண்டு எழுத்து சொற்கள் வெளிவந்து விட்டன.
விடை கிடைத்து விட்டது அவள் வாழ்க்கைக்கு.
#சிறுகதை